வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

11-வது பொறியியல் கலந்தாய்வு..! 5,057 பேருக்கு இடம் ஒதுக்கீடு.

பொறியியல் படிப்புக்கான பதினொறாவது நாள் கலந்தாய்வின் முடிவில் 49,130 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெற்று வருகிறது.

ஜூலை 17-ம் தேதி தொழிற் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஜூலை 23-ம் தேதி பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியநிலையில் நேற்று ஒன்பதாவது நாள் கலந்தாய்வு நடைபெற்றது. பதினொறாவது நாள் கலந்தாய்வுக்கு 8,316 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அதில் 5,057 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. 3,223 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை.

இதுவரையில் 49,130 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிகமாக இ.சி.இ துறை மற்றும் மெக்கானிக்கல் துறையில் சேர்வதற்கு அதிக ஆர்வம் காட்டுவருகின்றனர். இதுவரையில் இ.சி.இ பிரிவில் 10,308 பேருக்கும் மெக்கானிக்கலில் 9,033 பேருக்கும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரையிலான ஒன்பது நாள்கள் கலந்தாவின் முடிவில் 31 % பேர் கலந்துகொள்ளவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக