ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கும், தேசிய திறனறி தேர்வு, தமிழகத்தில், நவ., 5ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும், மாநில மற்றும் தேசிய அளவிலான திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவில் தேர்ச்சி பெறும்
மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், நவ., 5ல் தேர்வு நடக்க உள்ளது. மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, அந்தமான் - நிகோபார் தீவுகள் போன்றவற்றில் மட்டும், நவ., 4ல் தேர்வு நடக்கும் என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக