ஜோதிடத்தில் பிறந்த மாதத்தை வைத்து பெண்களின் குணாதிசயங்களை எளிமையாக தெரிந்துக் கொள்ள முடியும்.
ஜனவரி
ஜனவரி மாதம் பிறந்த பெண்கள் பேரார்வம் உள்ளவர்களாகவும், இலட்சியங்கள் நிறைய கொண்டவர்களாகவும், எந்த ஒரு விடயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
இவர்கள் தங்கள் உணர்வை அவ்வளவு சீக்கிரமாக வெளிப்படையாக கூற மாட்டார்கள். இவர்களை போன்றே உள்ள நபர்களுடன் மட்டுமே அதிகம் பழகுவார்கள்.
பிப்ரவரி
பிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் சற்று ரொமான்டிக்காக இருப்பார்கள். இவர்களிடம் பொறுமையாக பழக வேண்டும். ஏனெனில் அனைவராலும் இவர்களை எளிதில் புரிந்துக் கொள்ள முடியாது.
மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் வலிமையாகவும் கவர்ச்சி மிக்கவராகவும் இருப்பார்கள். அதனால் இவர்கள் எளிதில் அனைவரையும் ஈர்த்து விடுவார்கள். மிக நேர்மையாக, இருக்கும் இவர்கள் அவ்வளவு எளிதாக காதலில் விழுந்து விட மாட்டார்கள்.
ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் இராஜ தந்திரம் மிக்கவர்கள். அனைவருடனும் மிக எளிதாக பழகி பேசுவார்கள். சிலர் பொறாமை குணமும் கொண்டிருப்பார்கள். இவர்கள் தாங்கள் முழுமையாக நம்பும் நபர்களிடம் மட்டுமே தங்கள் மனதை திறந்து காட்டுவார்கள்.
மே
மே மதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உறதியான விடாப்பிடியான குணம் கொண்டவர்கள். இவர்கள் நேர்மையாக பழகுவார்கள். இவர்களுக்கென்று தனிக் கோட்பாடுகள் இருக்கும். ஈர்ப்பு மிக்க இவர்களுடன் காதலில் விழுவது மிக கடினம்.
ஜூன்
ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஆர்வமிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் எளிதாக அனைவருடனும் பேசுவார்கள். கற்பனை திறன் அதிகமாக இருக்கும். இவர்கள் எப்போதும் ஒளிவுமறைவின்றி நடந்துக் கொள்வார்கள்.
ஜூலை
ஜூலை மாதத்தில் பிறந்த பெண்கள் நேர்மை, அறிவு, அழகு ஆகியவற்றில் சிறப்பாக இருப்பார்கள். இவர்கள் மோதல்கள் ஏற்படாமல் வாழ விரும்புவதால், அனைவரிடமும் கனிவாக நடந்துக் கொள்வார்கள்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் தன்னம்பிக்கை மிக்க நல்ல உள்ளம் கொண்டிருப்பார்கள். இவர்கள் கண்டிப்பாக எதிலும் வென்று விடுவார்கள். இவர்களிடம் நகைச்சுவை உணர்வுகள் அதிகமாக இருக்கும்.
செப்டம்பர்
செப்டம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் அன்பு, கட்டுப்பாடு, அழகின் கலவை என்று கூறலாம். இவர்கள் யாரையும் அவ்வளவு எளிதாக மன்னித்து விட மாட்டார்கள்.
அதனால் இவர்களிடம் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும். இவர்கள் ஒருவருடன் பழகினால் நீண்ட நாள் உறவில் இணைந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் குணாதிசயங்கள் மிக வலுமையாக இருக்கும். உணர்ச்சிவசப்பட கூடிய பெண்களாக இருப்பார்கள். அனைவரிடமும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். தங்கள் மீது பொறாமை கொள்ளும் நபர்களையும் வெறுக்க மாட்டார்கள்.
நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட ஒருப்படி முன்னே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பொய்களை வேகமாக கண்டுபிடித்து விடுவார்கள். உண்மையாக இருக்க விரும்பும் இவர்கள், உண்மை மட்டுமே பேசுவார்கள்.
டிசம்பர்
டிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் பொறுமை இருக்காது. ஆனால் இவர்கள் லக்கியான நபர்கள். எப்போதும் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக் கொண்டு எளிதில் வெற்றி பெறுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக