ராசிபுரம் வட்டத்தில் காலியாகவுள்ள 17 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு :
ராசிபுரம் வட்டத்திற்குள்பட்ட சின்னக்காபாளையம், குட்டலாடம்பட்டி, கரியாம்பட்டி, கல்லங்குளம்,, முத்துகாளிப்பட்டி, வடுகம், சந்திரசேகரபுரம் அக்ரஹாரம், மலையம்பாளையம் , புதுப்பாளையம், நாச்சிப்பட்டி, வெண்ணந்தூர், கோனேரிப்பட்டி, பொ. ஆயிபாளையம், பெரப்பன் சோலை, பழந்தின்னிபட்டி, ஆர். குமாரபாளையம், ஈஸ்வரமூர்த்திபாளையம் உள்ளிட்ட 17 கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு இன சுழற்சி மற்றும் தகுதி அடிப்படையில் ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.]
இப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பணியிடம் காலியாகவுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களாகவும் அல்லது அதற்கு அருகே உள்ள கிராமங்களில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். 1.7.18 அன்று ஆதி திராவிடர்களுக்கு உச்சவரம்பு வயது 35, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு (எம்பிசி., டிசி) உச்சவரம்பு 32, பிற்படுத்தப்பட்ட இனத்தவர்களுக்கு 32, மிகவும் பிற்படுத்தப்பட்ட முன்னாள் படைவீரர் மற்றும் முன்னுரிமை பெற்றவர்களுக்கு வயது உச்சவரம்பு கிடையாது.
இன சுழற்சியற்ற, வயது மற்றும் கல்வி தகுதியற்ற நபர்களிடமிருந்து பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.
இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்விச் சான்று மற்றும் இதரச் சான்றுகளின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் 22.09.2017 அன்று மாலை ஐந்து மணிக்குள் விண்ணப்பங்களை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவவகம், ராசிபுரம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக