புதன், 23 ஆகஸ்ட், 2017

வெளியானது ஆண்ட்ராய்டு ஓரியோ!!

      ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் எட்டாவது வெர்ஷனுக்கு, பலரும் கணித்ததைப்போல உலகின் முன்னணி குக்கியான 'ஆண்ட்ராய்டு ஓரியோ' (Android Oreo) எனப் பெயரிடப்பட்டுள்ளது.


       சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூகுள்  I/O டெவலப்பர்கள் மாநாட்டில் 'ஆண்ட்ராய்டு ஓ' என்று மட்டும் இது பெயரிடப்பட்டிருந்தது.
கூகுள் நிறுவனத்தின் பிக்ஸல் மற்றும் நெக்சஸ் வகை டிவைஸ்களில் ஓரியோ வெர்ஷன் முதலில் அப்டேட் செய்யப்பட உள்ளது. முந்தைய ஆண்ட்ராய்டு நெளகட் வெர்ஷனை விட சில முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 

ஆண்ட்ராய்டு ஓரியோவின் பீட்டா வெர்ஷன் பிக்ஸல் சி, பிக்ஸல் மொபைல்களுக்கு மட்டும் வெளியிடப்பட்டிருந்தது. இதேபோல் அதிகாரபூர்வ ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் இந்தவகை டிவைஸ்களில் தான் முதலில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
*ஆண்ட்ராய்டு ஓரியோவின் சில முக்கிய அம்சங்கள் :*
 
*1. ஸ்மார்ட் ஷேரிங்:*
 
ஆண்ட்ராய்டு ஓரியோ வெர்ஷனின் முக்கியமான அம்சமே இதன் செயற்கை நுண்ணறிவுத்திறன்தான். இதில் இடம்பெற்றுள்ள ஸ்மார்ட் ஷேரிங் வசதியானது மொபைல் கேமராவுடன் இணைந்து செயல்படக்கூடியது. உதாரணமாக மொபைல் கேமராவில் செல்ஃபி எடுத்ததும், அதைப் பகிர்வதற்காக சமூக வலைதளங்களை ஆண்ட்ராய்டு பரிந்துரைக்கும். இந்த வசதியானது பயனாளர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும்.
 
*2. ஐகான்களின் வடிவம் :*
 
ஐகான்களின் வடிவத்தை விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதற்காக அடாப்டிவ் ஐகான் லாஞ்சர் இந்த வெர்ஷனில் இடம்பெற்றுள்ளது. இதனால், ஆண்ட்ராய்டு ஓரியோ வெர்ஷனில் ஆப்களின் ஐகான்களை வட்டம், சதுரம் என மாற்றிக்காட்டும்.
 
*3. AI காப்பி பேஸ்ட்:*
 
ஸ்மார்ட் ஷேரிங் வசதியைப்போல கூகுளின் மற்றொரு செயற்கை நுண்ணறிவுத்திறன் வசதி இந்த AI காப்பி பேஸ்ட். டெக்ஸ்ட்டை காப்பி பேஸ்ட் செய்வதை மெஷின்லேர்னிங் மூலமாக மெருகேற்றியிருக்கிறது கூகுள். உதாரணமாக தொலைபேசி எண்ணை காப்பி செய்தால், அதனருகே டூல்பார் தோன்றி டயலர் ஆப்ஷனைக் காட்டும். இதேபோல் முகவரியை காப்பி செய்ததும், அதைத்தேடுவதற்கு வசதியாக டூல்பாரில் கூகுள் மேப்ஸ் தோன்றும்.
 
*4. பிக்சர் இன் பிக்சர் மோட்:*
 
ஓர் ஆப்பை பயன்படுத்தும் அதே நேரத்தில், ஒரே திரையிலேயே வீடியோக்களை ப்ளே செய்து பார்க்கும் வசதியான பிக்சர் இன் பிக்சர் மோடை ஆண்ட்ராய்டு ஓரியோ வெர்ஷனில் கொண்டுவந்துள்ளது கூகுள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக