பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற, இன்று கடைசி நாள். தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., போன்ற, ஒன்பது துணை நிலை மருத்துவ படிப்புகள் உள்ளன.
இந்த படிப்புகளுக்கு, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 538 இடங்களும், தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 7,458 இடங்களும் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்தாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், 22 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும், ஜூலை, 7ல் துவங்கியது. விண்ணப்பம் பெற, இன்று கடைசி நாள். www.tnhealth.org, www.tnmedicalselection.orgஎன்ற இணையதளங்களிலும், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், நாளை 5:00 மணிக்குள், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு வந்து சேர வேண்டும். இது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறுகையில், ''துணை நிலை மருத்துவ படிப்புகளுக்கு, 26 ஆயிரத்து, 978 பேர் விண்ணப்பங்கள் பெற்றுஉள்ளனர்; இணையதளத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுள்ளதால், எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புஉள்ளது,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக