பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட, வரும், 31ம் தேதி வரையிலான காலக்கெடு நீட்டிக்கப்படாது என, ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
தீர்ப்பு :
'பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், 31ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. ஆதார் தொடர்பான வழக்கில், தனிமனித சுதந்திரம், அடிப்படை உரிமை என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதனால், ஆதாரை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
காலக்கெடு:
இது குறித்து, ஆதார் எண்ணை வழங்கும் ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே, நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், ஆதார் எண்ணை பல்வேறு சமூக நல திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான உத்தரவு, நிதி மசோதா மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, 31ம் தேதியுடன் முடிகிறது; அந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது.
செல்லும்:
பல்வேறு அரசு திட்டப் பணிகள், நல திட்ட உதவிகள், மானியங்களுக்கு, ஆதார் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை. அதனால், ஆதார் தொடர்ந்து செல்லுபடியாகும். இவ்வாறு அவர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக