செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

மீண்டும் வருகிறது 1,000 ரூபாய் நோட்டு??

"வரும் ஆனா வராது..." என்ற நிலையிலேயே நீண்ட நாள்களாகப் பேசப்பட்டுவந்த 1,000 ருபாய் நோட்டு வரப்போவதாக, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த வருடம் 500, 1000 ரூபாய் நோட்டுகளை எல்லாம் திரும்பப் பெற்றுக்கொண்டு, புதிய 500, 2000 ருபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. மத்திய அரசின் கறுப்புப் பணத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை, மக்களிடையே பெரும் பணத் தட்டுப்பாட்டை சில காலம் ஏற்படுத்தியது. பின்னர், சில்லறைத் தட்டுப்பாடு உருவானது.
இந்த நிலையில், சமீபத்தில்தான் புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. விரைவில் புதிய 1000 ரூபாய் நோட்டுகளும் வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மைசூர் மற்றும் சல்போனி பிரின்டிங் பிரஸ்களில், விரைவில் 1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்கும் என்றும் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக