சுதந்திர தின விழாவிற்கு, வாழ்த்து கடிதம் அனுப்பிய, முதலாம் வகுப்பு மாணவனுக்கு, முதல்வர் பழனிசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். கோவை மாவட்டம், சுகுணா பள்ளியில், முதலாம் வகுப்பு படிக்கும், மாணவன் ஸ்ரீவந்த், இந்திய வரைபடம் மற்றும் தேசியக் கொடியை, மூவர்ணத்தில் வரைந்து, சுதந்திர தின விழா வாழ்த்து தெரிவித்து, முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினான்.
அதற்கு, முதல்வர் பழனிசாமி அனுப்பியுள்ள பதில் கடிதம்: தாங்கள் வரைந்திருந்த, தேசியக் கொடியையும், தேசிய வரைபடத்தையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். இளம் வயதில், உங்களுடைய நாட்டுப்பற்றை கண்டு, பெருமை அடைகிறேன். நீங்கள், கல்வியில் சிறந்த மாணவராகவும், ஒழுக்கத்தில் மேன்மையானவராகவும் திகழ்ந்து, நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்க, என் ஆசிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக