சனி, 12 ஆகஸ்ட், 2017

9 மற்றும் பிளஸ் 1 வகுப்பில் சேர செப்., 30 வரை அனுமதி.

தமிழகத்தில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1ல், செப்., 30 வரை, மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்பதாம் மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடந்தது. 

பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஜூலை, 31 வரை, மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, செப்., 31 வரை, அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர் அல்லது முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதி பெற்று, மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

 கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு வரை, கல்வியாண்டு முடியும் வரை மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக