பி.ஆர்க்., படிப்புக்கான, தமிழக அரசின், 'நாட்டா' தேர்வின் முடிவு, நாளை வெளியாகிறது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 49 ஆர்க்கிடெக்சர் கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்புக்கு, 3,043 இடங்கள் உள்ளன. அரசு ஒதுக்கீட்டில், கவுன்சிலிங் மூலம், 2,049 இடங்கள் நிரப்பப்படுகின்றன.
இதற்கு, 1,777 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.பி.ஆர்க்.,கில் சேர்வதற்கான, மத்திய அரசின், 'நாட்டா' தேர்விலும், தமிழகத்தில் இருந்து, 2,009 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதனால், 1,000க்கும் மேற்பட்ட இடங்கள், காலியாகும் அபாயம் உள்ளது. அதே நேரம், 'நாட்டா' தேர்வை தவறவிட்ட பல மாணவர்கள், பி.ஆர்க்., படிப்பில் சேர தயாராக உள்ளனர். அவர்களை, தனியார் கல்லுாரிகளில் சேர்க்க, சிறப்பு தேர்வு நடத்துமாறு, கல்லுாரிகள் கோரிக்கை விடுத்தன.
இதை ஏற்று, தமிழக அரசு, மாநில அளவிலான, 'நாட்டா' நுழைவுத் தேர்வை, ஆக., 12ல் நடத்தியது. இதில், 1,122 பேர் பங்கேற்க தகுதி பெற்றனர். அவர்களில், 80 சதவீதம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றுள்ளனர்.விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து விட்டது; தேர்வு முடிவு, நாளை வெளியிடப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக