ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

PG - TRB | முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு ஆக.28, 29-ல் சான்றிதழ் சரிபார்ப்பு.

கடந்த ஜூலை 2-ம் தேதி நடை பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் (பொறுப்பு) டி.ஜெகந்நாதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2016-2017-ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பதவிகளில் 3375 காலியிடங்களை நிரப்ப ஜூலை 2-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்காலிக விடைக்குறிப்பு (கீ ஆன்சர்) ஜூலை 17-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வர்களிட மிருந்து ஆட்சேபனைகள் பெறப்பட்டு பாடவல்லுநர்களைக் கொண்டு இறுதி விடை குறிப்பு தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விடைத் தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, எழுத்துத்தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலம் தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விவரங் களை அறிந்துகொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதி்மன்றம் பிறப் பித்த உத்தரவின்படி நிறுத்திவைக்கப் பட்டுள்ளன.

எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள் ஒரு பதவிக்கு ஒருவர் என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் பட உள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணி 9 மாவட்டங்களில் ஆகஸ்ட் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதன் முழுவிவரமும் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக