சிபிசிஎல் என அழைக்கப்படும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேன் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.3 of 2017 –CPCL/HRD:03:056
நிறுவனம்: Chennai Petroleum Corporation Limited (CPCL)
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
காலியிடங்கள்: 33
பணி: Engineer & Officer
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Engineer (Chemical) - 15
2. Engineer (Mechanical) - 06
3. Engineer (Electrical) - 03
4. Engineer (Civil) - 01
5. Engineer (Metallurgy) - 02
6. IT&S Officer - 01
7. Human Resources Officer - 03
8. Safety Officer - 01
9. Marketing Officer - 01
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.வ விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 31.07.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.cpcl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
“The Advertiser (Unit: Chennai Petroleum Corporation Limited),
Post Bag No. 781, Circus Avenue Post Office, Kolkata 700017”
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2017
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 08.09.2017
எழுத்துத் தேர்வு 2017 செப்டம், அக்டோபர் மாதங்களில் நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2017/8/12/CPCL-Recruitment-2017-33-Engineer-Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக