எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, தமிழ் வளர்ச்சி துறையின், தமிழ் மன்றம் சார்பில், அக்., 6ல், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை,
www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போட்டியில் பங்கேற்க விரும்பும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியர், பள்ளி தலைமை ஆசிரியரிடம், உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று, போட்டி நடக்கும் நாளில், மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை அல்லது உதவி இயக்குனரிடம் அளிக்க வேண்டும். போட்டிக்கான தலைப்பு, போட்டி துவங்கும் போது அறிவிக்கப்படும். போட்டி முடிவுகளும், அன்றே அறிவிக்கப்படும். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசாக, 7,000 ரூபாய்; மூன்றாம் பரிசாக, 5,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக