திங்கள், 2 அக்டோபர், 2017

இன்ஜினியரிங் மாணவர்கள் 'அரியர்ஸ்' எழுத சலுகை.

இன்ஜினியரிங் படிப்பில், 'அரியர்ஸ்' வைத்து உள்ள மாணவர்கள், தேர்வு எழுத, அண்ணா பல்கலை, ஓராண்டு சலுகை வழங்கி உள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிக்கும் மாணவர்கள், நான்கு ஆண்டு தேர்வுகள் முடித்த பின், தேர்ச்சி பெறாத, 'அரியர்ஸ்' பாடங்களை, அடுத்தடுத்த ஆண்டுகளில் எழுதி வந்தனர். 

ஆனால், 'படிப்புக் காலம் முடிந்தும், அரியர்ஸ் வைத்துள்ளோர், மூன்று ஆண்டுகளுக்குள் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கட்டுப்பாடு விதித்துள்ளது. 'இந்த கட்டுப்பாடு, இந்த ஆண்டு முதல், கட்டாயம் பின்பற்றப்படும்' என, அண்ணா பல்கலை அறிவித்தது. அதனால், ௨௦௧௦ வரை படித்த மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு, மீண்டும் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. 

இது குறித்து, கூடுதல் சலுகை வழங்க, மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து, அண்ணா பல்கலை, ஓராண்டு மட்டும் சலுகை வழங்கி உள்ளது.

இது குறித்து, உயர் கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் கூறியதாவது: இன்ஜி., படிப்பில், 2010 வரை சேர்ந்தோருக்கு, அரியர்ஸ் பாடங்கள் இருந்தால், அவற்றை, 2018 பிப்., மற்றும் ஆகஸ்டில் தேர்வு எழுத, ஓராண்டு சலுகை வழங்கப்படுகிறது. அதற்குள் தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் தேர்வு எழுத சலுகை வழங்கப்படாது. மேலும், ௨௦௧௧ முதல், இன்ஜி., படிப்பில் சேர்ந்தோர், ஏழு ஆண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டும்; கூடுதல் அவகாசம் வழங்கப்படாது. சிறப்பு சலுகையின் கீழ், மாணவர்கள், ஏற்கனவே பதிவு செய்த பாடங்களுக்கு மட்டும், தேர்வு எழுதலாம். 
மாவட்டத்திற்கு, ஒரு மையத்தில் மட்டும் தேர்வு நடக்கும். தேர்வு அட்டவணை, கட்டண விபரம் பல்கலையால் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக