சனி, 16 செப்டம்பர், 2017
தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு: ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு நவம்பர் 4ம் தேதி நடக்கிறது.
ஆசிரியர் தகுதி படிப்புக்கு பதிவு வரும் 30 வரை அவகாசம் நீடிப்பு.
இணையதளம் முடங்கியதால், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான, தகுதி படிப்புக்கான பதிவுக்கு, வரும், 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், அதற்கான ஆசிரியர் தகுதி தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
வெள்ளி, 15 செப்டம்பர், 2017
அமலுக்கு வருகிறது டிஜிட்டல் எஸ்.ஆர்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், நான்கு லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், அரசு சம்பளத்தில், ஒரு லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு, தினசரி வருகைப் பதிவு, செயல் திறன், பணிமூப்பு, கல்வித் தகுதி, நடத்தை போன்றவற்றை கணக்கிட்டு, சலுகைகளும், விருதுகளும் வழங்கபடுகின்றன.இதில், பெரும்பாலான ஆசிரியர்கள், பள்ளிக்கு ஒழுங்காக வராமல் இருந்தாலும், பதிவேட்டில் வந்ததாக குறிப்பிடுவர்.
புதிய தேர்வு மையம் : பள்ளிகளில் விபரம் சேகரிப்பு.
தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கான மையங்கள் அமைப்பதற்காக, அதுகுறித்த விபரங்களை அனுப்பி வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 தேர்வும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுஉள்ளது.
வியாழன், 14 செப்டம்பர், 2017
TNPSC - வனத்துறை பணிகளுக்கான குரூப் ஒன் ஏ போட்டி தேர்வு அறிவிப்பு !!
செவ்வாய், 12 செப்டம்பர், 2017
மெட்ரிக், மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு : செப்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
திண்டுக்கல்: 'மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் பி.எட்., படித்து பணியாற்றும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் பங்கேற்க, புதிய கல்வி திட்டத்தில் செப்.15ம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியம்' என, கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
உத்தரவு பிறப்பிக்க புதிய 'மொபைல் ஆப்ஸ்' : கல்வித்துறையில் அறிமுகம்.
தேனி: அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் 'குரல்' பதிவு மூலம் ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவுகள் பிறப்பிக்க புதிய மொபைல் ஆப்ஸ் கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திங்கள், 11 செப்டம்பர், 2017
வெள்ளி, 8 செப்டம்பர், 2017
அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணக்கெடுப்பு.
அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை இடம் மாற்றுவதற்காக, மாணவர் எண்ணிக்கை கணக்கெடுப்பு துவங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான பொது கவுன்சிலிங், ஆண்டுதோறும், மே மாதம் நடத்தப்படும். 2011-2016 வரை, ஆகஸ்டில் இந்த கவுன்சிலிங் நடந்தது.
செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு.
தனித் தேர்வர்களுக்கான, அறிவியல் செய்முறைத் தேர்வு, 18ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு துணை தேர்வில், அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், செய்முறை தேர்வில் பங்கேற்க
வேண்டும். அதற்கான தேர்வு, 18ல் துவங்கி, 20ம் தேதி வரை நடக்கும். பள்ளியில் படிக்காமல், நேரடியாக, 10ம் வகுப்பு தேர்வில் பங்கேற்க உள்ள, தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை தேர்வை எழுதிய பிறகே, மற்ற பாடங்களின் தேர்வுகளை எழுத வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேண்டும். அதற்கான தேர்வு, 18ல் துவங்கி, 20ம் தேதி வரை நடக்கும். பள்ளியில் படிக்காமல், நேரடியாக, 10ம் வகுப்பு தேர்வில் பங்கேற்க உள்ள, தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை தேர்வை எழுதிய பிறகே, மற்ற பாடங்களின் தேர்வுகளை எழுத வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை பல்கலை தேர்வு 'ரிசல்ட்' நேன்று வெளியீடு
தொலைநிலை கல்வியில், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவு, நேன்று(செப்.,7) வெளியாகிறது. சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளுக்கான தேர்வு முடிவு, நேன்று வெளியானது.
தேர்வு முடிவை, www.ideunom.ac.inஇணையதளத்தில், நேற்று இரவு, 8:00 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடுக்கு, செப்., 9 முதல், 18 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவை, www.ideunom.ac.inஇணையதளத்தில், நேற்று இரவு, 8:00 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடுக்கு, செப்., 9 முதல், 18 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன், 6 செப்டம்பர், 2017
தேசிய திறனாய்வு தேர்வு 13க்குள் விண்ணப்ப பதிவு.
தேசிய திறனாய்வு தேர்வுக்கான விண்ணப்பங்களை, வரும், 13க்குள் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் மனித வளத் துறை சார்பில், ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அவர்களது உயர்கல்வி முடிக்கும் வரை, மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப் பங்களை, அந்தந்த தலைமை ஆசிரியர்கள், ஆன் -- லைனில் பதிவு செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
'சிந்தனையை தூண்டும் ஆசிரியர்கள் தேவை'
'மாணவர்களின் சுய சிந்தனையை துாண்டும் ஆசிரியர்களையே, உலகம் எதிர்பார்க்கிறது,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான நேற்று, நாடு முழுவதும், ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில், 'நல்லாசிரியர் விருது' வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான நேற்று, நாடு முழுவதும், ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில், 'நல்லாசிரியர் விருது' வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.
3,336 முதுகலை பட்டதாரி ஆசிரியர், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

