புதன், 6 செப்டம்பர், 2017

உடலை ஊடுருவி பார்க்கும் மருத்துவ கேமரா இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடித்தார்!!

உடல் உள்ளுறுப்புகளை ஆய்வு செய்து, நோயின் தன்மையை கண்டறிய எக்ஸ்–ரே, ஸ்கேன் ஆகியவற்றைத்தான் டாக்டர்கள் நம்பி உள்ளனர்.

அதற்கு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவாகிறது. இனிமேல், அதற்கு அவசியமின்றி, உடலை ஊடுருவி பார்த்து நோயின் தன்மையை கண்டறிய மருத்துவ கேமரா வந்து விட்டது.

இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு துறை பேராசிரியரான விஞ்ஞானி கெவ் தாலிவால் தலைமையிலான குழு, இந்த கேமராவை கண்டுபிடித்துள்ளது. கெவ் தாலிவால், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

தனது கண்டுபிடிப்பு குறித்து அவர் கூறுகையில், ‘உடல் உள்ளுறுப்புகளின் தன்மை குறித்து ஆராய எண்டோஸ்கோப் போன்ற மருத்துவ சாதனங்களை டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், எண்டோஸ்கோப்பை உடலுக்குள் செலுத்திய பிறகு, அதன் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து சரியான இடத்துக்கு நகர்த்த எக்ஸ்–ரேவைத்தான் டாக்டர்கள் நாட வேண்டி உள்ளது. ஆனால், இந்த கேமரா, எண்டோஸ்கோப் இருப்பிடத்தை சரியாக காட்டி விடும். அதற்கான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிலிக்கான் சிப், அக்கேமிராவில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் எக்ஸ்–ரே மற்றும் ஸ்கேனுக்கு அவசியம் இருக்காது‘ என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக