வெள்ளி, 2 ஜூன், 2017

SBI - ன் புதிய சேவை கட்டணம் : 10 அம்சங்கள்.

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ள சேவை கட்டணம் இன்று (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவை கட்டணம் குறித்து பல குழப்பங்கள் நிலவி வருகிறது. இதற்கு எஸ்பிஐ தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ.,ல் எதற்கெல்லாம் கட்டணம் :

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு.

 அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. 

இன்ஜி., கவுன்சிலிங் நாளை கடைசி நாள்.

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, நாளை கடைசி நாள்.அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 550க்கு மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க, மே, 1 முதல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. 

TRB : 1,111 B.T ஆசிரியர் பணியிடம் : ஜூன் 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு.

அரசு பள்ளிகளில் 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன், 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 286 பட்டதாரி ஆசிரியர்; 623 பின்னடைவு இடங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என, 1,111 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

CBSE- பிளஸ் 2 தேர்வில் மறுமதிப்பீடு 'நோ'.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 28ல் வெளியாகின. மாணவர்களுக்கு, 'டிஜி லாக்கர்' என்ற, டிஜிட்டல் முறையில், மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. 

'செட்' தேர்வு 'ரிசல்ட்' எப்போது?

உதவி பேராசிரியர் பணிக்கான, மாநில தகுதித் தேர்வான, 'செட்' தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள், வரும், 7ல் முடிகின்றன. கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, மாநில அளவிலான, 'செட்' தேர்வு, ஏப்., 23ல் நடந்தது. அன்னை தெரசா பல்கலை, இந்த தேர்வை நடத்தியது. தேர்வுத்தாள் மதிப்பீட்டு பணிகள், மே முதல் வாரம் துவங்கின. 

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை!!!

தொலைநிலை கல்வியில் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தவும், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் வழங்கவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், ஆராய்ச்சி படிப்புகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

முதுநிலை ஆசிரியர் நியமனத்தில்,இடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப்பம்.

முதுநிலை ஆசிரியர் நியமனத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருப்பது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2,500க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 1,663 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், ஜூலை, 7ல், தேர்வு நடத்தப்படுகிறது. 

பிளஸ் 1 பொதுத்தேர்வு தனி தேர்வர்களுக்கு உண்டா?

'பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு கட்டாயம்' என, அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தனித்தேர்வர்களுக்கு தேர்வு உண்டா என்பது குறித்து, அரசாணையில் கூறப்படாததால், அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழகத்தில், பள்ளிக்கல்வித் துறையில் பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில், பிளஸ் 1க்கு, பொதுத்தேர்வு கட்டாயம் என்பதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வங்கி 2 வங்கி மாற வசதி.

 வாடிக்கையாளர்கள், தங்களின் வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமல், வேறு வங்கிக்கு மாறும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

ஜூன் 4ம் தேதி ஜிப்மர் நுழைவு தேர்வு.

ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் வரும், 4ம் தேதி 

நடக்கிறது.இது குறித்து, ஜிப்மர் இயக்குனர் சுபாஷ் சந்திர பரிஜா, 'டீன்' சுவாமிநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

வியாழன், 1 ஜூன், 2017

ரத்தான DRIVING LICENSE புதுப்பிக்க என்ன வழி?

விபத்து ஏற்படுத்திய டிரைவர்களின், ஓட்டுனர் உரிமத்தின் தகுதி இழப்பை ரத்து செய்ய, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை, அரசு தெளிவுபடுத்தி உள்ளது.


சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, விபத்து ஏற்படுத்தும் டிரைவர்களின், ஓட்டுனர் உரிமத்தை, தகுதி இழப்பு செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு, தகுதி இழப்பை ரத்து செய்ய, சில தெளிவுரைகளை வழங்கி உள்ளது...

சட்ட படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பம்.

 மூன்று புதிய கல்லுாரி கள் உட்பட, ஒன்பது அரசு சட்டக் கல்லுாரிகளில், விண்ணப்ப வினியோகம், நாளை துவங்குகிறது. தமிழகத்தில், ஆறு அரசு சட்டக் கல்லுாரி கள் செயல்பட்டு வந்த நிலையில், விழுப்புரம், தர்மபுரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில், புதிய சட்டக் கல்லுாரிகள் துவங்கப்பட உள்ளன. 

தனியார் ஆசிரியர்கள் மூலம் அரசு பள்ளிகளில் பாடம்!!!

'ஆசிரியர் பற்றாக்குறை உள்ள அரசு பள்ளிகளில், அருகிலுள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்த வேண்டும்' என, அரசுக்கு, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு யோசனை தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர், இளங்கோவன், பள்ளிக்கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

பள்ளி திறக்கும் நாளில் இரண்டு 'செட்' சீருடை.

பள்ளிகள் திறக்கும் அன்றே, மாணவர்களுக்கு இரண்டு, 'செட்' சீருடைகள் வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மதிய உணவு அருந்தும், 45 லட்சம் மாணவ, மாணவியருக்கு, ஆண்டுக்கு, நான்கு செட் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. 


இந்த சீருடைகளை, பள்ளிக்கல்விக்காக, சமூக நலத்துறை தயார் செய்து வழங்குகிறது.புதிய கல்வி ஆண்டு, இன்று துவங்கும் நிலையில், முதற்கட்டமாக, இரண்டு செட் சீருடைகள், மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட உள்ளன. பள்ளி திறக்கும் முதல் நாளில், இரண்டு செட் சீருடையும், பின், ஆக., - செப்டம்பரில், மீதமுள்ள இரண்டு செட் சீருடையை வழங்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

TNPSC இணையதளத்தில் ஜாதிகள் பட்டியலில் மாற்றம்.

போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவில், ஜாதிகளின் பட்டியல் மாற்றப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.


டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வு களில் பங்கேற்க, அதன் இணையதளத்தில், ஒருமுறை பதிவு முறையில், ஆன்லைனில் தகவல்களை புதுப்பிக்க வேண்டும். 

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு நாளை 'ரிசல்ட்' வெளியீடு?

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், மார்ச்சில் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 28ல் வெளியானது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த தேர்வில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. 

புதிய கல்வி ஆண்டு இன்று துவக்கம்.

கோடை விடுமுறை முடிந்து, அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான பணிகள், இன்று துவங்குகின்றன. வரும், 7ம் தேதிக்குள், முன்னேற்பாட்டு பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.