வெள்ளி, 2 ஜூன், 2017

'செட்' தேர்வு 'ரிசல்ட்' எப்போது?

உதவி பேராசிரியர் பணிக்கான, மாநில தகுதித் தேர்வான, 'செட்' தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள், வரும், 7ல் முடிகின்றன. கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, மாநில அளவிலான, 'செட்' தேர்வு, ஏப்., 23ல் நடந்தது. அன்னை தெரசா பல்கலை, இந்த தேர்வை நடத்தியது. தேர்வுத்தாள் மதிப்பீட்டு பணிகள், மே முதல் வாரம் துவங்கின. 

தற்போது, மூன்றாம் தாளுக்கான மதிப்பீடு நடந்து வருகிறது. ஜூன், 7ல் விடை திருத்தம் முடிகிறது.பின், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தேர்வு எழுதியவர்களில், முதல், 15 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.

இது குறித்து, அன்னை தெரசா பல்கலை பதிவாளர், கீதா கூறுகையில், ''இந்த மாத இறுதிக்குள், இணையதளத்திலும், நாளிதழ்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக