தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் சென்னை, ஆர்.கே.நகர்
தொகுதிக்கு உட்பட்ட, தண்டையார்பேட்டையில் 8 கோடியே 48 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல்
(இருபாலர்) கல்லூரிக்கான நிர்வாகம் மற்றும் கல்வியியல் கட்டிடங்களை
காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும் 25 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள
அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிக்கான நிர்வாகம் மற்றும்
வகுப்பறைக்கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலை அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிக்கான நிர்வாகம் மற்றும்
வகுப்பறைக்கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
கல்வி திட்டத்தின் கீழ் 15 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 25 கோடியே
12 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்
கட்டிடங்கள் மற்றும் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் புன்னைப்
புதுப்பாளையம், முனுகப்பட்டு மற்றும் பெரியகோளாப்பாடி ஆகிய
இடங்களில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 5 கோடியே
26 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக்
கட்டிடங்கள், ஆய்வகக் கட்டிடங்கள், கழிப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர்
ஆகியவற்றை காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார். மேலும்,
பல்வேறு மாவட்டங்களில் 421 கோடியே 45 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்
மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக