காரைக்குடி: பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான கவுன்சிலிங் காரைக்குடி அழகப்ப செட்டியார், இன்ஜி., கல்லுாரியில் ஜூன், 30-ல் துவங்கி, ஜூலை 10- வரை நடக்கிறது.
டிப்ளமா, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கான விண்ணப்ப வினியோகம், மே 17-ல் துவங்கியது. ஜூன் 19,- வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 13 ஆயிரத்து, 69 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான கவுன்சிலிங் வரும், 30-ல் துவங்குகிறது.
பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர், இளங்கோ கூறியதாவது:
சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங், 30ம் தேதி காலை, 9:30 மணிக்கு துவங்குகிறது. அன்றே லெதர் மற்றும் பிரின்டிங் பிரிவுக்கும், மறுநாள் கெமிக்கல், டெக்ஸ்டைல் பிரிவுக்கும் நடக்கிறது. ஜூலை, 1 முதல் 3ம் தேதி வரை சிவில், 3 - 7ம் தேதி -வரை மெக்கானிக்கல், 7 - 10ம் தேதி வரை எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கும், 10ம் தேதி பி.எஸ்சி.,க்கும் நடக்கிறது.
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, கவுன்சிலிங் நடக்கும் இடமான அழகப்பா இன்ஜி., கல்லுாரி வரை போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1,500 மாணவர்கள் அழைக்கப்படுவர். மாணவர்கள் கல்லுாரியில் இருக்கும் இடங்களை தெரிந்து கொள்ள வெளிப்புறம் காட்சி திரை வசதி செய்யப்பட்டிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக