ஞாயிறு, 25 ஜூன், 2017

"PROOF OF DOCUMENT IS VERY VERY IMPORTENT"

 ஒரு பையன் ரயில்ல போயிட்டிருந்தானாம்.அப்போ சூப்பர் பிகர் ஒன்னு அவனுக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து ஒக்காந்தாளாம்.அவள பாத்ததும் நம்மாளுக்கு செம குஷியாயிடுச்சாம்.அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லைன்றதால நம்மாளு அந்த பொண்ண சைட் அடிச்சிட்டே இருந்தானாம்.

அந்த பொண்ணும் மெதுவா அப்பப்போ இவன பாக்க.இளையராஜா பேக் ரவுண்டு வாசிக்க அப்டியே வானத்துல பறக்கற பீலிங்ல இருந்தானாம் நம்ம பையன்.


கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணு இவன் இருந்த சீட் பக்கத்துல வந்து ஒக்கார,நம்மாளுக்கு சும்மா ஜிவ்வுனு ஏறிடுச்சாம்.

அப்பரம் அந்த பொண்ணு இவன்கிட்ட "ஒழுங்கு மரியாதையா உங்கிட்ட இருக்குற வாட்ச், மோதரம், செயினு, பர்ஸ், கிரடிட் கார்டு எல்லாத்தையும் எடுத்து குடுத்துடு.இல்லேனா நீ என்னை பலவந்தமா பலாத்காரம் பண்ண ட்ரை பண்றேனு கத்தி சத்தம் போட்டு எல்லாரையும் கூப்டுருவேன்"னு சொல்லிச்சாம் அந்த சூப்பர் பிகர்.

பசங்க தான் எப்போமே உஷார் ஆச்சே..அதுக்கு நம்ம பையன் பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர எடுத்து "எனக்கு காது கேக்காது,வாய் பேச வராது.நீங்க என்ன சொல்றிங்கனே எனக்கு புரில.நீங்க சொன்னத இதுல எழுதி காட்டுங்கனு" சொல்லி எழுதி காட்டினானாம்.

அவன் எழுதி காமிச்சத படிச்சிட்டு அந்த பொண்ணும் பேப்பர வாங்கி அவ என்ன சொன்னாலோ அதை அப்படியே எழுதி காட்டினாளாம்.பிறகு நம்ம பையன் அந்த பேப்பர வாங்கி பாக்கெட்ல வச்சிட்டு அவகிட்ட மெதுவா சொன்னானாம் "இப்போ கத்துடி பாக்கலாம்".....

ங்கொய்யால, யாருகிட்ட!

நீதி:
"PROOF OF DOCUMENT IS VERY VERY IMPORTENT"                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக