தமிழகத்தில் 2017-2018-ம் ஆண்டுக்கான என்ஜினீயரிங்(பி.இ.) சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணாபல்கலைக்கழகம் நடத்த உள்ளது. அதற்காக பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 88 ஆயிரத்து 778 பேர் மாணவர்கள். 52 ஆயிரத்து 299 பேர் மாணவிகள்.
விண்ணப்பித்த மாணவ- மாணவிகளுக்கு ரேண்டம் எண் வெளியிடும் நிகழ்ச்சி, அண்ணாபல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு ரேண்டம் எண்ணை வெளியிட்டார். உடனே அனைத்து மாணவர்- மாணவிகளுக்கும் ரேண்டம் எண் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் www.annauniv.edu என்ற அண்ணாபல்கலைக்கழக இணையதளத்திற்கு சென்று அவர்களுக்கான இ-மெயில் மற்றும் ரகசிய எண் ஆகியவற்றை பதிவு செய்தால் அவர்களுக்கு ரேண்டம் தெரியவரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக