ஞாயிறு, 25 ஜூன், 2017

கேட்டது ஒன்று,! கிடைத்தது ஒன்று!!


ஆண்டவனிடம்,
வலிமை கேட்டேன்!
          கஷ்டங்களை
          கொடுத்தார்!!
எதிர் கொண்டேன்,
வலிமை பெற்றேன்.👍
                 
அறிவு கேட்டேன்!

        பிரச்சினைகளை
        கொடுத்தார்!!
 சமாளித்தேன்                            
அறிவு பெற்றேன்.👍

தைரியம் கேட்டேன் !
         ஆபத்துக்களை    
         கொடுத்தார் !!
சந்தித்து மீண்டேன்  ,
தைரியம் பெற்றேன். 👍

அன்பு கேட்டேன் !
         வம்பர்களை  
         கொடுத்தார்
அனுசரித்து சென்று
வம்பர்களின் அன்பையும் பெற்றேன். 👍

வளமான வாழ்வு கேட்டேன்!    
       சிந்திக்கும் மூளையை
       கொடுத்தார்.
வளமான வாழ்வு கிடைத்தது.👍

கேட்டது ஒன்று,!
         கிடைத்தது ஒன்று!!

கிடைத்ததை வைத்து
         கேட்டதைப் பெற்றேன்.👍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக