சனி, 24 ஜூன், 2017

செல்போன் பேசியபடி வாகனத்தில் சென்றால் ‘லைசென்ஸ்’ ரத்து.

தமிழக அரசு போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை 
ஓட்டுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. 
இதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், 
அதிகவேகத்தில் வாகனத்தில் செல்பவர்கள், போக்குவரத்து 
சிக்னலை மதிக்காதவர்கள், செல்போன் பேசிக் கொண்டே 
வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் ஆகியோர் மீது கடும் 
நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுபவர்களின் லைசென்சை
 ரத்து செய்து 6 மாதங்களுக்கு அதனை முடக்கி வைப்பது 
என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான 
ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. 
போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 
தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் போக்குவரத்துதுறை 
மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில்தான் 
லைசென்ஸ் ரத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் 
சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் உடனடியாக இந்த 
உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக