வெள்ளி, 30 ஜூன், 2017

வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு பணி: ஃபேஸ்புக்குடன் இணைந்த தேர்தல் ஆணையம் !!

ஃபேஸ்புக்குடன் இணைந்து வாக்காளர் அடையாள அட்டைக்கான ஆள்சேர்ப்பு முகாமை நடத்த உள்ள இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை பதிவு செய்வதற்கான நினைவூட்டலுக்காக ஃபேஸ்புக்குடன் தேர்தல் ஆணையம் கைகோர்த்துள்ளது. அதன்படி 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைக்காக பெயர்
சேர்த்தல் குறித்து நினைவூட்டலை ஃபேஸ்புக் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் 4ம் தேதி வரை வழங்கும்.

அந்த நினைவூட்டலை பேஸ்புக் பயனாளர்கள் க்ளிக் செய்யும் பட்சத்தில் அது தேர்தல் ஆணையத்தின் புதிய வாக்காளர் பதிவு பக்கத்துக்கு இட்டுச் செல்லும். இந்த முறை தமிழ், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 13 இந்திய மொழிகளில் ஃபேஸ்புக் பயனாளர்களுக்குச் செல்லும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வுக்காக முதல்முறையாக தேர்தல் ஆணையம் ஃபேஸ்புக்குடன் கைகோர்த்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக