வியாழன், 22 ஜூன், 2017

செல்போன் பேசியபடி வாகனம் இயக்கினால் ஓட்டுநர்உரிமம் நிரந்தரமாக ரத்து: தமிழக அரசு முடிவு.

செல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாம் என்று தமிழக அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்தில் ஹெல்மெட் அணியாவிட்டால் விழிப்புணர்வு பயிற்சியுடன் அபராதம் வசூலிக்க வேண்டும்என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் சென்றால் உரிய அபராதத்தை வசூலிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலோ, சிவப்பு விளக்கை தாண்டினாலோ, அதிவேகமாக வாகனத்தை இயக்கினாலோ ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யலாம்.செல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாம் என்று தமிழக அரசு அதரடி முடிவெடுத்துள்ளது. சோதனை அலுவலர்கள் ஆய்வின் போது அசல் உரிமத்தை வாகன ஓட்டிகள் காண்பிக்க வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக