புதன், 21 ஜூன், 2017

தமிழகத்தில் மூடப்படும் பொறியியல் கல்லூரிகள் விவரம்!



சென்னை:

தமிழகத்தில் மாணவர் சேர்க்கை   இல்லாததால் 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

அண்ணா பல்கலையில்  இன்று நடைபெற்ற ரேண்டன் எண் வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர் கல்வி துறை செயலர் சுனில் பாலிவல் இந்த தகவலை வெளியிட்டார்.
சென்னை:

மேக்னா பொறியியல் கல்லூரி,

ஸ்ரீரங்கம்பாள் கட்டட வடிவமைப்பு கல்லூரி

கோவை:

விவேகானந்தா பெண்கள் பொறியியல் கல்லூரி,

சசி பிஸினஸ் ஸ்கூல், மகாராஜா பிரித்வி பொறியியல் கல்லூரி

திருச்சி:

பாவேந்தர் பாரதிதாசன் கல்லூரி,

ஆர்.வி.எஸ்- கே.வி.கே நிர்வாக கல்லூரி,

சுவாமி விவேகானந்தா நிர்வாகவியல் கல்லூரி

மதுரை:

சி.ஆர் பொறியியல் கல்லூரி,

மைக்கேல் மேலாண்மை கல்லூரி

நெல்லை:

ஜோ சுரேஷ் பொறியியல் கல்லூரி

மேலே குறிப்பிட்டுள்ள 11 கல்லூரிகளிலும் இந்த ஆண்டு, முதலாண்டு  மாணவர் சேர்க்கை  நடைபெறாது என்றும், ஆனால், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது ஆண்டு மாணவர்களின் கல்வி தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக