வெள்ளி, 2 ஜூன், 2017

பிளஸ் 1 பொதுத்தேர்வு தனி தேர்வர்களுக்கு உண்டா?

'பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு கட்டாயம்' என, அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தனித்தேர்வர்களுக்கு தேர்வு உண்டா என்பது குறித்து, அரசாணையில் கூறப்படாததால், அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழகத்தில், பள்ளிக்கல்வித் துறையில் பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில், பிளஸ் 1க்கு, பொதுத்தேர்வு கட்டாயம் என்பதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 பள்ளிகளில், பிளஸ் 1 பாடத்தை சரியாக நடத்த வில்லை என்பதால், பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை, 10ம் வகுப்பு மட்டும் முடித்து, பிளஸ் 2 தேர்வை எழுதும், தனித்தேர்வர்கள், பிளஸ் 1 தேர்வையும் எழுத வேண்டுமா என்பது குறித்து, தமிழக அரசு தெரிவிக்கவில்லை. பிளஸ் 1 தேர்வையும் எழுத வேண்டும் என்றால், அதற்கான நடைமுறை என்ன என, தெரியாமல், தனித்தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக