திங்கள், 14 ஆகஸ்ட், 2017

NEET தேர்வில் ஓராண்டு விலக்கிற்கு மத்திய அரசு தயார், பழனிச்சாமியுடன் விஜயபாஸ்கர் ஆலோசனை.

நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

- அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார் என உறுதியளித்து உள்ளார். சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற, முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பலமுறை மத்திய அரசிடம் ஆலோசித்தனர். நீட் தேர்விலிருந்து அரசு கல்லூரிகளுக்கு மட்டும் இந்த வருடம் விலக்கு அளிக்க தமிழக அரசு கோரினால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார்.

ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார், மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தால் ஒத்துழைப்பு அளிக்கப்படும். கிராமப்புற மாணவர்கள் பாதிப்பார்கள் என்பதை விளக்கி தனி அவசர சட்டம் கொண்டுவர வேண்டும். நீட் தேர்வில் நிரந்தர விலக்கு என்பது கிடையாது என கூறிஉள்ளார்.

மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க தயார் என நிர்மலா சித்தாராமன் கூறியது குறித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு தர ஒத்துழைப்பு அளிக்க தயார் என்பது வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் கருத்தும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதும் ஒரே கருத்துதான் என்றார். இவ்விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் பழனிச்சாமியுடன் ஆலோசனை செய்வதாக கூறினார். இதனையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்-அமைச்சர் பழனிச்சாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.

NEET தேர்வில் ஓராண்டு விலக்கிற்கு மத்திய அரசு தயார், பழனிச்சாமியுடன் விஜயபாஸ்கர் ஆலோசனை

🔺நீட் - நாளை காலை அவசர சட்ட வரைவு*
*🔺நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - அமைச்சர் விஜயபாஸ்கர்*

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார் என உறுதியளித்து உள்ளார். சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற, முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பலமுறை மத்திய அரசிடம் ஆலோசித்தனர். நீட் தேர்விலிருந்து அரசு கல்லூரிகளுக்கு மட்டும் இந்த வருடம் விலக்கு அளிக்க தமிழக அரசு கோரினால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார்.

ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார், மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தால் ஒத்துழைப்பு அளிக்கப்படும். கிராமப்புற மாணவர்கள் பாதிப்பார்கள் என்பதை விளக்கி தனி அவசர சட்டம் கொண்டுவர வேண்டும். நீட் தேர்வில் நிரந்தர விலக்கு என்பது கிடையாது என கூறிஉள்ளார்.

மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க தயார் என நிர்மலா சித்தாராமன் கூறியது குறித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு தர ஒத்துழைப்பு அளிக்க தயார் என்பது வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் கருத்தும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதும் ஒரே கருத்துதான் என்றார். இவ்விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் பழனிச்சாமியுடன் ஆலோசனை செய்வதாக கூறினார். இதனையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்-அமைச்சர் பழனிச்சாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக