அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயி ரம் பேர் ஆன்லைனில் விண் ணப்பித்திருப்பதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரியத் தின் தலைவருமான (பொறுப்பு) டி.ஜெகந்நாதன் தெரிவித்தார். மறு அறிவிப்பின் படி எழுத்துத் தேர்வானது செப்டம்பர் மாதம்16-ம் தேதி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
சுதந்திர தின விழாவிற்கு, வாழ்த்து கடிதம் அனுப்பிய, முதலாம் வகுப்பு மாணவனுக்கு, முதல்வர் பழனிசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். கோவை மாவட்டம், சுகுணா பள்ளியில், முதலாம் வகுப்பு படிக்கும், மாணவன் ஸ்ரீவந்த், இந்திய வரைபடம் மற்றும் தேசியக் கொடியை, மூவர்ணத்தில் வரைந்து, சுதந்திர தின விழா வாழ்த்து தெரிவித்து, முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினான்.
சென்னை தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக் கல்வி அலு வலர் (ஏ.இ.இ.ஓ.) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வு மூல மாகவும், 40 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படு கின்றன.
நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
- அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார் என உறுதியளித்து உள்ளார். சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற, முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பலமுறை மத்திய அரசிடம் ஆலோசித்தனர். நீட் தேர்விலிருந்து அரசு கல்லூரிகளுக்கு மட்டும் இந்த வருடம் விலக்கு அளிக்க தமிழக அரசு கோரினால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார்.
நல்லாசிரியர் விருது பெற பரிந்துரைக்கும் ஆசிரியர்களுக்கு, ஆறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப் பட்டுள்ளன.இந்திய மறைந்த ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 748 கம்ப்யூட்டர் ஆசிரியர்பணியிடங்கள், போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கம்ப்யூட்டர் பிரிவு வகுப்புகள் துவக்கப்பட்டன. கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், சிறப்பு தேர்வு நடத்தி நிரந்தரம் செய்யப்பட்டனர்;
எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், மாற்று சான்றிதழ்களில், தமிழில் பெயர் பதித்து வழங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அவர்களின் மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழில், ஆங்கிலத்திலேயே பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டு வந்தன. நடப்பாண்டு முதல், மாணவர்களின் பெயர், பள்ளி போன்ற விபரங்கள், மதிப்பெண் சான்றிதழில், ஆங்கிலத்துடன், தமிழிலும் இடம் பெறுகின்றன.
தமிழக அரசின் விடாப்பிடியான முயற்சியால், மருத்துவ மாணவர் சேர்க்கை யில், 'நீட்' தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு, அவசர சட்டத்தை இயற்றுவதால், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிரச்னை, முடிவுக்கு வருகிறது. இதனால், 17ம் தேதி முதல், பிளஸ் 2 தேர்வு முடிவு அடிப்படை யில், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
PGTRB தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியாக 50 % என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தேர்வர்கள் இந்த மதிப்பெண்கூட எடுக்கவில்லை. எனவே பல பாடங்களுக்கு கட்-ஆப் மதிப்பெண் என்ற பேச்சே இல்லை. 75 மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் வேலை என்ற நிலை.
1) மைக்ரோ பயாலஜி பாடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் ஒருவர்கூட இல்லை
2) பயோ கெமிஸ்ட்ரி பாடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் ஒருவர்கூட இல்லை
3) அரசியல் அறிவியல் பாடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் ஒருவர்கூட இல்லை