சனி, 4 நவம்பர், 2017

அண்ணா பல்கலை இன்றைய (நவ. 4) தேர்வுகள் நடக்கும்'.

சென்னை: 'ஏற்கனவே அறிவித்தபடி, இன்று தேர்வுகள் நடக்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பில், தமிழகம் முழுவதும் உள்ள, 5௦௦க்கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளில், செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது. மழை ஒருபுறம் இருந்தாலும், இதுவரை திட்டமிட்டபடி தேர்வுகள் நடந்து வந்தன.

நேற்று முன்தினம் பெய்த தொடர் கனமழையால், நேற்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், 'இன்று திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.

'கடலோரத்தில் உள்ள, 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

தேசிய திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்.

இன்று நடக்கவிருந்த, தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 18க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முதற்கட்ட தேசிய திறனாய்வு தேர்வு, தமிழகம் முழுவதும், இன்று நடப்பதாக இருந்தது. மழை வெள்ளத்தால், பல்வேறு மாவட்டங்களில், பள்ளிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இன்று நடக்கவிருந்த தேசிய திறனாய்வு தேர்வு, ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு, நவ., 18ல் நடத்தப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டிவிகிதம் குறைப்பு :எஸ்.பி.ஐ.,

வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டிவிகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) குறைத்துள்ளது. வைப்புநிதி மீதான வட்டிவிகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்.பி.ஐ., வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் மீதான வட்டி விகிதங்கள் 5 அடிப்படை புள்ளிகளைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 

வெள்ளி, 3 நவம்பர், 2017

மத்திய -மாநில அரசுகள், ஒய்வுபெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் சலுகைகள்!.

“ஒய்வு பெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்களுக்கு மத்திய -மாநில  அரசுகள் சலுகைகள், பல இடங்களில் வழங்குகின்றன . அது ஏனோ நம்மில் பலரு க்கு தெரிவதில்லை. இதில் போதிய விழிப்புணர்வு இல் லை. கூடவே, பயன்படுத்திக் கொள்ள தேவையற்ற தயக்க ம். இவற் றை தெரியப்படுத்தி சலுகையை பெற தூண்டவே இந்த பதிவு..!

தேசிய திறனாய்வு தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' பெற வசதி

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், வரும் ஆண்டுகளில் கல்வியை தொடர, மத்திய அரசு உதவித்தொகை வழங்குகிறது. இதை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வு, நாளை நடக்கிறது. தமிழகத்தில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வை எழுத உள்ளனர். 

இதற்கான ஹால் டிக்கெட்டை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

விஏஓ மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் ; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது. தமிழக அரசின் பல்வேறு வகையான பதவிகளுக்கும் தனித்தனியாக  கிரேடு வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், குரூப்-4 , விஏஓ ஆகிய பணியிடங்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த எழுத்துதேர்வை இனி ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது. 

'108' ஆம்புலன்சை தொடர்பு கொள்ள, 'மொபைல் ஆப்'.

தமிழகத்தில், '108' அவசர கால மைய கட்டுப்பாட்டு அறைக்கு, விபத்து குறித்து தகவல் தெரிவிக்க, புதிதாக வடிவமைக்கப் பட்டுள்ள, 'மொபைல் ஆப்'செயலியை, முதல்வர் பழனிசாமி, துவக்கி வைத்தார்.

மேலும், 75 லட்சம் ரூபாய் செலவில், '108' அவசர கால ஊர்தி டிரைவர்களுக்கு, 'ஆண்ட்ராய்டு மொபைல் போன்' வழங்கும் திட்டத்தையும், அவர் துவக்கினார்.

'என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தில் திருவள்ளுவர் வரலாறு சேர்ப்பு'.

''தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தில், திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு இடம் பெறவுள்ளது,'' என, பா.ஜ., முன்னாள், எம்.பி.,யும், திருவள்ளுவர் இளம் மாணவர் பேரவை தலைவருமான தருண் விஜய் தெரிவித்தார்.

கன மழை காரணமாக இன்று ( 03.11.2016 ) 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.

  • காஞ்சிபுரம் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • சென்னை  - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • திருவள்ளூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

வியாழன், 2 நவம்பர், 2017

கனமழை - 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை (02.11.2017).

  • திருவாருர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 
  • காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.
பலத்த மழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை, 'நீட்' தேர்வு நவ., 27 வரை அவகாசம்.

முதுநிலை படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு, நவ., ௨௭ வரை, பதிவு செய்யலாம்' என, தேசிய தேர்வு வாரியமான, என்.பி.இ., அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவம் படிக்கும் மாணவர்கள், முதுநிலை படிப்பில் சேர, 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதில், எம்.டி., - எம்.எஸ்., படிப்புகளுக்கு தனியாகவும், எம்.டி.எஸ்., படிப்புக்கு தனியாகவும், தேர்வு நடத்தப்படுகிறது.

பங்களிப்பு ஓய்வூதியம் 7.8 சதவீதம் வட்டி.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, 7.8 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் உட்பட பல தரப்பட்டவர்களுக்கும், அவர்களின் சம்பளத்தில் இருந்து, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு சார்பிலும், பணம் செலுத்தப்படுகிறது.


இத்தொகைக்கு, அக்., 1 முதல் டிச., 31 வரை, 7.8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர், சண்முகம் பிறப்பித்துள்ளார்.

வங்க கடலில் புதிய காற்றழுத்தம்: மழை தொடரும் என எச்சரிக்கை.

'வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிக்கும் நிலையில், அதன் அருகே, புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. அதனால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும்' என, வானிலை மையம் அறிவித்துள்ளது.

புதன், 1 நவம்பர், 2017

DIGITAL SR BOOKLET - எந்த பக்கத்தில் எதை எழுத வேண்டும் - தமிழில் எளிமையான விளக்கம்.



பக்கம்-1 தற்போதைய விவரம்

பக்கம்-3 பணியாளர் சுய விவரம்

 பக்கம்-4 -5 முதல் பணி நியமன விவரம்

NTS Exam Date change

NTSE தேர்வு தேதி மாற்றம் -05.11.2017 க்கு பதிலாக  04.11.2017 அன்று நடைப்பெறும்.

நவம்பர் மாத பள்ளி நாட்காட்டி.


RTI : SSA - விருப்பம் இல்லாத ஆசிரியர்களை ஆசிரிய பிரதிநிதி (RP)யாக அனுப்ப இயலாது.


SSA - விருப்பம் இல்லாத ஆசிரியர்களை ஆசிரிய பிரதிநிதி (RP)யாக அனுப்ப இயலாது.