சனி, 4 நவம்பர், 2017

வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டிவிகிதம் குறைப்பு :எஸ்.பி.ஐ.,

வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டிவிகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) குறைத்துள்ளது. வைப்புநிதி மீதான வட்டிவிகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்.பி.ஐ., வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் மீதான வட்டி விகிதங்கள் 5 அடிப்படை புள்ளிகளைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 


வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை 8.35 சதவீதத்திலிருந்து 8.30 சதவீதமாக குறைத்துள்ளது. இது வங்கித்துறையிலேயே மிகவும் குறைவானதாகும். இதேபோல், வாகன கடன்களுக்கான வட்டிவீகிதத்தை 8.75 சதவீதத்திலிருந்து 8.70 சதவீதமாக குறைத்துள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல் புதிய வட்டிவிகிதம் அமலுக்கு வந்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக