சனி, 16 செப்டம்பர், 2017

ஆறு அறிவு மனிதனுக்கு ஆயிரம் நோய் என்கிறோம். ஏன்?

உணவு
உறக்கம்
தண்ணீர்
வேலை
மன அமைதி

நாம் ஏற்கனவே உண்ட உணவு செரித்த பின் மீண்டும் பசித்து சாப்பிட்டால் இந்த உடலுக்கு எந்த மருந்தும் தேவையில்லை என நினைவில் கொள்ளுங்கள்.

பசியின் அளவு தெரியாமல் அதிகமாக சாப்பிட்டால் நோய் அளவில்லாமல் வரும்.


📮சளி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற உடலின் கழிவு நீக்க செயலுக்கு நாம் ஓடி ஓடி மருந்து மாத்திரை எடுக்காமல்,

தேவையான நேரத்தில் உடலிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

இரவு உறக்கம் சரி இல்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான ஆயிரம் நோய்கள் வரும்.

 ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம்.*


 இரவு கண் விழித்து வேலை பார்ப்பது

பகலில் உறங்கி சமன் செய்யதுவிடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும், கோடி கோடியாய் கொடுத்தாலும் இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது.

யாருக்கு தூக்கம் வரும் ? உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்க கூடாது.

இதற்கு நீங்கள் Walking, yoga, Gym இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, வீட்டு வேலைகளை இயந்திரத்துனையின்றி செய்தாலே போதுமானது.

 ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.

📮முழு உடலுக்கும் வேலை வேண்டும் என்பவர் உங்கள் வீடு சொந்த வீடாக இருந்தால் அதில் உள்ள காளி இடத்தில் 3-2 என்கிற அளவில் ஒரு அடி ஆழம் குளி வெட்டி மண்ணை வாரி மேலே போடலாம்.அடுத்த நாள்  மற்றொரு இடத்தில் இதேபோல் வெட்டி மூடலாம். ஸ
இது முழு உடல் உழைப்பு வேண்டும் என்பவர்க்கு மட்டும்.

பொதுவாக
தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிக்க பருத்தி துணியில் வடித்து மண் பானை, செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து குடிக்கலாம்.

அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. Ac யில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

வெயிலில் காட்டில் வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

சரி எவ்வளவுதான் குடிப்பது என கேட்கிறீர்களா ! ஒரு மனிதர் உண்ணும் உணவு, வாழும் இடம், செய்யும் வேலை இதை பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.

தாகம் எடுக்கும் போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

Ro, Mineral, Filter, boiled water பேராபத்து.

📮மனம் நிம்மதியாக இருக்க யாரிடமும் எதற்காகவும் கடன் வாங்காதீர்கள்.  உங்களுக்கு பிடித்ததை படியுங்கள், பிடித்த வேலை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு.  தலங்களுக்கு சென்று வாருங்கள்.

ஆற்றங்கரை ஓரம் வரும இதமான காற்று.
சோலையில்  வேப்ப, புங்க மர சோலைகளில் வரும் மனமான காற்று அங்கே வரும் சட்டுக் குருவி, குயில் , காக்கைகள் கானம் இவை எல்லாம் மனதிற்கு மருந்து.

வெளியில் செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள குழந்தை தாதா பாட்டிகளிடம் கதையை சொல்வது கேட்பது என ஏதாவது ஒன்றை செய்து மன சந்தோஷம் காணுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக