சனி, 16 செப்டம்பர், 2017

பேரறிஞர் அண்ணா முதல்வராக இருக்கிறார்... சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...

பேரறிஞர் அண்ணா முதல்வராக இருக்கிறார்... சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...

எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் அண்ணாவின் மீதும் , ஆட்சியின் மீதும் அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்...

கழக உறுப்பினர்கள் அண்ணாவின் பதிலுரைக்காக காத்திருந்தனர்... நாவன்மையால் நானிலத்தையே கட்டிப் போடும் நாவரசர் அமைதியாக இருக்கிறார்...

ஏமாற்றமடைந்த உடன்பிறப்புகள் பின்னர் அண்ணாவிடம் வாளாயிருந்தது பற்றி வினவினர்...


அண்ணா புன்முறுவலுடன் சொன்னார்...
"இரு பெண்கள் கைகளில் கரண்டி வைத்துக் கொண்டு சண்டை போடும்போது , அதில் ஒரு பெண்மணி தன்னிடம் இருந்த கரண்டியை நீட்டியும் , ஆட்டியும் பேசினாள்.மற்றொரு பெண்மணி கரண்டியை ஆட்டாமல் நிதானமாக பேசினாள்.. ஏனென்றால் ஆட்டிப்பேசிய பெண்மணியிடம் இருந்தது வெறுங்கரண்டி... இன்னொரு பெண்ணின் கரண்டியில் உளுந்து இருந்தது...

அதனால் எது குறித்தும் கவலைப்பட தேவையில்லாதவர்கள் என்ன வேண்டுமென்றாலும் - எப்படி வேண்டுமென்றாலும் பேசலாம்...

நம்மிடம் ஆட்சி உள்ளது... நாளைக்கு ஏதேனும் நடந்தால் அது குறித்து பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் உள்ளது... அதனால் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தலைமைப் பொறுப்பில் உள்ளவரால்பேசிவிடவோ , செய்து விடவோ முடியாது"

அதனால் தான் அவர்
 "பேரறிஞர் அண்ணா"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக