புதன், 6 செப்டம்பர், 2017

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 26,932 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற  ஆசிரியர்கள் தின விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்றனர். விழாவில் சிறப்பாக பணியாற்றிய 396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

இன்று முதல் கட்டாயம் ஆகிறது 6 வகை விதிமீறல்களுக்கு போலீசார் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்பார்கள்.

தமிழகத்தில் இன்று (புதன் கிழமை) முதல் வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுனர் உரிமங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பெரியய்யா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

குருகுலத்தின் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.


ஆசிரியர் தின வரலாறு.

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

ஆசிரியர் தின வரலாறு

PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இனி குறைந்தபட்ச சம்பளமே 21,000 ரூபாயாம்..!

7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தினை 18,000 ரூபாயில் இருந்து 21,000 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சக வட்டார தகவல்கள் கூறுகின்றன.

நுகர்வோர் விலை குறியீட்டு அளவைச் சரிசெய்வதற்குச் சட்டம் தேவைப்படும் என்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் என்று கூறப்படுகின்றது.

பி.டி.எஸ்., காலியிடங்களுக்கு இன்று நடக்குது, 'கவுன்சிலிங்'.

சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 1,122 இடங்கள் காலியாக உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, இன்று கவுன்சிலிங் நடக்கிறது.தமிழகத்தில், 'நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

முதன்முறையாக விளையாட்டுத் துறை அமைச்சரான விளையாட்டு வீரர்!

இந்திய வரலாற்றில் முதன்முறையாக விளையாட்டுத்துறைக்கு விளையாட்டு வீரர் ஒருவர் அமைச்சராகியுள்ளார்.


இந்திய விளையாட்டுத்துறை அமைச்சராக விஜய் கோயல் இருந்து வந்தார். பிரதமர் மோடி இன்று மாற்றியமைத்த அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த விஜய் கோயலுக்கு பதிலாக துப்பாக்கி சுடும் வீரர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் விளையாட்டுத்துறை அமைச்சராக (தனிபொறுப்பு) நியமிக்கப்பட்டார்.

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி!

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி விமானி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடங்கள்: 217

பணியின் தன்மை: பயிற்சி விமானி

வாகனம் ஓட்டுபவர்கள் நாளை முதல் அசல் உரிமம் வைத்து இருப்பது கட்டாயம்.

செப்டம்பர் 1-ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி, கே.அஸ்வின் ஆகியோர் தனித்தனியாக பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தனர்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்து நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு பாராட்டு.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-


மாணாக்கர்களின் அறிவுக் கண்ணை திறக்கும் ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி, இந்திய நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்து, தாம் ஏற்ற பொறுப்புகளை திறம்பட வகித்து, ஆசிரியர் சமுதாயத்திற்கு பெரும் சிறப்பினை சேர்த்த 
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதியை (இன்று) ஆசிரியர் தினமாக கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 4 செப்டம்பர், 2017

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2015 - ன் படி விண்ணப்ப அனுப்புவது எப்படி - எளிய வழிகாட்டி.


மாணவர்கள் இணையத்தளம் பயன்படுத்தல் - இயக்குனர் செயல்முறைகள்.

பள்ளிக்கல்வி - மாணவர்கள் இணையத்தளம் பயன்படுத்தல் - அனைத்து வகை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகள் - இயக்குனர் செயல்முறைகள்.

10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் கிராமப்புறத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 
 தமிழகம் முழுவதும் கிராமப்புற மாணவ, மாணவியர் கல்வி அறிவு பெற அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 

இவர்களுக்காக மதிய உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில்  கிராமப்புற பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

குருப்பெயர்ச்சி பொதுப் பலன்கள் 2017.


 மேஷம் - Click Here & View 

 ரிஷபம் - Click Here & View

வேலைவாய்ப்பு - சிறப்பு புதுப்பித்தல் சலுகையை பயன்படுத்தி 21.11.2017க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

தமிழக அரசால் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளதையடுத்து, ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2015 வரை, தங்கள் பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள்,
இத்துறை இணையதளம் வாயிலாகவோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ தங்கள் பதிவினை 21.11.2017க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

Aadhar Number is mandatory for Registration,Renewal and Updation

வேளாண் படிப்பில் 703 இடங்கள் காலி!!!

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வின் தொடர்ச்சியான நேற்று, 228 பேர் விரும்பிய இடம் தேர்வு செய்தனர்; மீதமுள்ள, 703 இடத்துக்கு, 1,500 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலையின்கீழ், 14 உறுப்பு மற்றும் 19 இணைப்பு கல்லுாரி உள்ளன. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, இளநிலை தொழில்நுட்பம் உட்பட, 13 பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

ரேஷன் பொருள் சப்ளை: புதிய விதி முறை அமல்!!



ரேஷன் கடைகளுக்கு, உணவுப் பொருட்கள்வினியோகம் செய்வதில், புதிய முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகியவை, குறைந்த விலையிலும் விற்கப்படுகின்றன. இவற்றை, நுகர்பொருள் வாணிப கழகம், மத்திய தொகுப்பு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்கிறது.

22.08..2017 STRIKE போராட்டத்திற்கான ஊதியத்தினை செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு.

JACTTO GEO 22.08..2017 STRIKE போராட்டத்திற்கான ஊதியத்தினை செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு - கருவூலத்துறை மாநில அரசு தலைமை செயலாளர் ஆணை வெளியீடு!!

         JACTTO GEO 22.08..2017 STRIKE போராட்டத்திற்கான ஊதியத்தினை செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு - கருவூலத்துறை மாநில அரசு தலைமை செயலாளர் ஆனைவெளியீடு.


             22-08-2017 ல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களால் நடத்தப்பெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான ஊதியத்தினை செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படவேண்டுமென தமிழ்நாடு கருவூலக ஆணையர் அவர்களால் சுற்றறிக்கை  அனுப்பட்டுள்ளது. சென்ற மாதம் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அதற்கான சான்று உண்டியலுடன் இணைக்கப்படவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது