புதன், 6 செப்டம்பர், 2017

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 26,932 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற  ஆசிரியர்கள் தின விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்றனர். விழாவில் சிறப்பாக பணியாற்றிய 396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

ஆசிரியர் தின விழாவில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
 
மாநில, மாவட்ட அளவிலான மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஒழிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஆசிரியர்கள் தங்கும் இல்லம் ஏற்படுத்தப்படும். இந்த ஆண்டு 5.40 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது. 3,336 முதுகலை மற்றும் 748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 40,633 ஆசிரியர்கள், 15,153 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறைக்கு 


ரூ 26,932 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக