திங்கள், 4 செப்டம்பர், 2017

ரேஷன் பொருள் சப்ளை: புதிய விதி முறை அமல்!!



ரேஷன் கடைகளுக்கு, உணவுப் பொருட்கள்வினியோகம் செய்வதில், புதிய முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகியவை, குறைந்த விலையிலும் விற்கப்படுகின்றன. இவற்றை, நுகர்பொருள் வாணிப கழகம், மத்திய தொகுப்பு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்கிறது.
மாத துவக்கத்தில் பொருட்கள் வழங்க வேண்டும் என்பதால், அதற்கு முந்தைய மாத இறுதியில் இருந்தே, ரேஷன் கடைக்கு பொருட்கள் அனுப்பப்படுகின்றன. அதன்படி, ஒவ்வொரு மாதமும், 25ம் தேதி முதல், அடுத்த மாதம், 5க்குள், 60 சதவீத பொருட்களை சப்ளை செய்ய வேண்டும். எஞ்சிய, 40 சதவீத பொருட்களை, 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அவ்வாறு, முறையாக பொருட்களை சப்ளைசெய்யாததால், ரேஷன் கடைகளில் தட்டுப்பாட்டுநிலவுகிறது. இதனால், மக்கள், பொருட்கள்கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.இது குறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:முன்பெல்லாம், ரேஷன் கடைகளில், அனைவரும் பொருட்களை வாங்குவதில்லை. இதனால், 1,000கார்டுகள் உள்ள கடைக்கு, 90 சதவீத பொருட்கள் தான் அனுப்புவோம்; அதுவும், பகுதி பகுதியாக அனுப்பப்படும். தற்போது, பலரும் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால், பொருட்கள் சப்ளையைதுரிதப்படுத்த, புதிய முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.அதன்படி, இனி ஒவ்வொரு மாதத்திலும், 21ம் தேதியில் துவங்கி, அடுத்த மாதம், 15க்குள், 100 சதவீத பொருட்களும் சப்ளை செய்யப்படும். மாத முதல் வாரத்தில், அனைத்து கடைகளிலும் பொருட்கள் இருப்பதை உறுதி செய்வதுடன், அவ்வாறு இல்லை என்றால், அந்த விபரத்தை, ஊழியர்கள், உடனே அதிகாரிகளுக்கு தெரிவிப்பர்.இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக