செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சேலம் மாவட்டத்தில் ஆக.,9-ல் உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு.

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வருகிற 9-ந்தேதி உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) அன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகின்ற 19-ந்தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக