செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017
ICT Traing for 9th & 10th Teachers - ஆசிரியர்களுக்குத் தகவல் தொழில்நுட்ப பயிற்சி!
வகுப்பறையில் தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துவதில் ஆசிரியர்களை முதன்மையானவர்களாக மாற்றுவதற்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
மீண்டும் வருகிறது 1,000 ரூபாய் நோட்டு??
"வரும் ஆனா வராது..." என்ற நிலையிலேயே நீண்ட நாள்களாகப் பேசப்பட்டுவந்த 1,000 ருபாய் நோட்டு வரப்போவதாக, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலையில் 2ம் கட்ட கவுன்சிலிங்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், 14 உறுப்பு மற்றும், 19 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இதில், 13 பட்டப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இப்படிப்புகளில், 2,820 இடங்கள் உள்ள நிலையில், ஜூன், 19 முதல், 24 வரை முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது. இதில், 2,156 இடங்கள் பூர்த்தியாகின. 'நீட்' தேர்வு அடிப்படையிலே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டதால், தற்போது, வேளாண் படிப்புகளில் காலியிடம், 1,627 ஆக அதிகரித்துள்ளது.
இவற்றை நிரப்ப, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது. முதல் நாளில், 218 பேர் பங்கேற்றனர். கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய அரசுக் கல்லுாரிகளில், ஓ.சி., - பி.சி., - எம்.பி.சி., பிரிவினருக்கான இடங்கள் பூர்த்தியாகி விட்டன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 31ம் தேதி வகுப்புகள் துவங்குகிறது.
திங்கள், 28 ஆகஸ்ட், 2017
மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள் !!
நிதியாண்டு 2017-18-ல் வருமான வரி விதிமுறைகள் மற்றும் முதலீடு குறித்த சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!!
ராசிபுரம் வட்டத்தில் காலியாகவுள்ள 17 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு :
ராசிபுரம் வட்டத்திற்குள்பட்ட சின்னக்காபாளையம், குட்டலாடம்பட்டி, கரியாம்பட்டி, கல்லங்குளம்,, முத்துகாளிப்பட்டி, வடுகம், சந்திரசேகரபுரம் அக்ரஹாரம், மலையம்பாளையம் , புதுப்பாளையம், நாச்சிப்பட்டி, வெண்ணந்தூர், கோனேரிப்பட்டி, பொ. ஆயிபாளையம், பெரப்பன் சோலை, பழந்தின்னிபட்டி, ஆர். குமாரபாளையம், ஈஸ்வரமூர்த்திபாளையம் உள்ளிட்ட 17 கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு இன சுழற்சி மற்றும் தகுதி அடிப்படையில் ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.]
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு :
ராசிபுரம் வட்டத்திற்குள்பட்ட சின்னக்காபாளையம், குட்டலாடம்பட்டி, கரியாம்பட்டி, கல்லங்குளம்,, முத்துகாளிப்பட்டி, வடுகம், சந்திரசேகரபுரம் அக்ரஹாரம், மலையம்பாளையம் , புதுப்பாளையம், நாச்சிப்பட்டி, வெண்ணந்தூர், கோனேரிப்பட்டி, பொ. ஆயிபாளையம், பெரப்பன் சோலை, பழந்தின்னிபட்டி, ஆர். குமாரபாளையம், ஈஸ்வரமூர்த்திபாளையம் உள்ளிட்ட 17 கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு இன சுழற்சி மற்றும் தகுதி அடிப்படையில் ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.]
Scholorship Exams பற்றி அறிவோம் - முழு தொகுப்பு.
எப்படி குணப்படுத்துவது - அல்சர்?
அல்சர் என்பது உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் புண்களைக் குறிக்கும்.
புண்கள் ஏற்பட்டு, அப்புண்ணில் வலி ஏற்பட்டு, அந்த இடம் பாதிப்படைந்து, வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால், அவற்றில் இரண்டாம் தொற்று ஏற்பட்டு, உடல் சோர்வடைந்து, சிகிச்சையில் பெரும் தாமதத்தை ஏற்படுத்துவதே அல்சரின் அறிகுறிகளாகும். முன்பெல்லாம் மனஉளைச்சல், உணவு மற்றும் வாழ்க்கை மாற்றத்தால் அல்சர் வருவதாக நினைத்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகள், இப்பொழுது ஹீலிபாக்டார் பைலோரி (helibactor phylori) அல்லது எச்.பைலோரி என்ற ஒரு வகை பாக்டீரியாவால் அல்சர் ஏற்படுவதாக கூறுகின்றனர். நேரம் கடந்து உணவு உண்பதும் அல்சர் வர காரணமாக உள்ளது. 'காஸ்' சிலிண்டர் வாடிக்கையாளர் விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் வசதி.
5,700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாத செல்போன் பேட்டரி..!!
5,700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாத செல்போன் பேட்டரியை, பிரிட்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
'செட்' தேர்வில் புதிய விதி அடுத்த ஆண்டில் அமல்.
பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வில், அடுத்த ஆண்டு முதல், புதிய விதி அமலாகிறது.கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், தேசிய அளவிலான, 'நெட்' அல்லது மாநில அளவிலான, 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், தமிழக அரசின் சார்பில், 'செட்' தேர்வை, கொடைக்கானல், தெரசா பல்கலை, இரு ஆண்டுகளாக நடத்துகிறது.
சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் முதல் நிலை தேர்வுக்கான பயிற்சி செப்டம்பர் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழக அரசின் அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வுக்கான பயிற்சியை பெற செப்டம்பர் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.
அடுத்த ஆண்டுக்கான(2018) ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிக்கான முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழக அரசின் அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அடுத்த ஆண்டுக்கான(2018) ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிக்கான முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழக அரசின் அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சனி, 26 ஆகஸ்ட், 2017
வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017
பிளஸ் 1 மாதிரி வினாவில் 'பெரிய' மாற்றங்கள்.
பிளஸ் 1 மாதிரி வினாத்தாளில், 10 மதிப்பெண் போன்ற பெரிய வினாக்கள் முற்றிலும் நீக்கப் பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ், சமஸ் கிருதம் போன்ற பாடங்களுக்கு மாதிரி வினா வெளியிடப்படவில்லை.
மொபைல் கட்டணம் 30 சதவீதம் வரை குறையும்.. மக்கள் கொண்டாட்டம்..!
இந்தியாவில் மொபைல் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதற்கு இணையாக நிறுவனங்கள் மத்தியிலான போட்டி மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது.
அதுவும் ஜியோ சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு ஏர்டெல், ஐடியா, வோடபோன் நிறுவனங்கள் தங்களது சேவைக்கான கட்டணத்தை அதிகளவில் குறைந்தது.
இந்தப் போட்டி தொடர்ந்து நீட்டித்தால் 2018ஆம் ஆண்டில் மொபைவ் கட்டணங்களின் அளவு 25-30 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவும் நீங்கள் அதிக இண்டர்நெட் டேட்டா பயன்படுத்துபவராக இருந்தால் கொண்டாட்டம் தான்.
இந்தப் போட்டி தொடர்ந்து நீட்டித்தால் 2018ஆம் ஆண்டில் மொபைவ் கட்டணங்களின் அளவு 25-30 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவும் நீங்கள் அதிக இண்டர்நெட் டேட்டா பயன்படுத்துபவராக இருந்தால் கொண்டாட்டம் தான்.
வியாழன், 24 ஆகஸ்ட், 2017
இன்று முதல் அனைவருக்கும் Jio இலவச போன்...
ஜியோவின் இலவச போனை பெறுவதற்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது
அதாவது, ஜியோ மேலும் ஒரு புரட்சியை உருவாக்க தொடங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் புது புது அறிவிப்பு வெளியிட்டு வருகிறது ஜியோ. ஜியோவின் எந்தொரு அறிவிப்பாக இருந்தாலும் மக்களுக்கு சலுகையாகத்தான் தெரிகிறது.
உதவி சிறை அலுவலர் பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு: செப்டம்பர் 6ம் தேதி நடத்தப்படும்.
உதவி சிறை அலுவலர் பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 6ம் தேதி நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மீன்வள உதவி ஆய்வாளர், முதலாள் பணியிடங்களுக்கான நேர்காணல் செப்டமவர் 11ம் தேதி நடத்தப்படும் என்றும் கண்காணிப்பாளர்(கார்மெண்ட்ஸ்) பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 7,8 தேதிகளில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Epayslip ல் Surrender Leave Salary - HRA சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள Epayslip திட்டத்தில் SURRENDER LEAVE SALARY வழங்கும் போது சரண்டர் ஊதியத்தில் HRA தொகை Annual income statement ல் காட்டுவதில்லை. அதனை சேர்த்து வழங்குமாறு TN CM CELL க்கு அனுப்பட்ட மனு ஏற்கப்பட்டு,அதனை திருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. Epayslip ல் SLS HRA சேர்க்கப்பட்டுள்ளது .
வேளாண் பல்கலை 2ம் கட்ட கவுன்சிலிங் தேதி அறிவிப்பு.
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 28ல் துவங்குகிறது.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நடப்பாண்டு, இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன், 19 - 24 வரை நடந்தது.
மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதில் நிலவிய சிக்கல் தீர்ந்ததால், 'வரும், 28 - 30 வரை, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கும்' என, தமிழ்நாடு வேளாண் பல்கலை அறித்துள்ளது.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நடப்பாண்டு, இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன், 19 - 24 வரை நடந்தது.
மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதில் நிலவிய சிக்கல் தீர்ந்ததால், 'வரும், 28 - 30 வரை, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கும்' என, தமிழ்நாடு வேளாண் பல்கலை அறித்துள்ளது.
'நெட்' தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்.
'பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவில், 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2016 வரை, ஆண்டுக்கு இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்பட்டது. இனி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவில், 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2016 வரை, ஆண்டுக்கு இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்பட்டது. இனி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-1 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் மே மாதம் வழங்கப்படும்ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு.
காஞ்சீபுரத்தை சேர்ந்த ராமலிங்கம், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக மாநில பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பணி விரைவாக முடிவடையும் விதமாக, இந்த குழுக்களில் இடம் பெற்றுள்ளவர்களை வேறு பணிக்கு மாற்றக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
‘நீட்’ தேர்வு பட்டியல் வெளியீடு மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது.
தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்காக ‘நீட்’ தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
புதன், 23 ஆகஸ்ட், 2017
இனி ஆன்லைனில் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன்!!
ஆன்லைனில் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் மேற்கொள்வதற்கான பணிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால், போலீஸார் நேரடியாக வந்து கொடுக்கப்பட்ட தகவல் உண்மைதானா என சரி பார்த்து பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த நடைமுறையால் காலதாமதம் அதிக அளவில் ஏற்பட்டு வந்துக்கொண்டிருக்கிறது. எனவே, இதை சரி செய்ய ஆன்லைனில் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் சிஸ்டம் கொண்டுவரபடவுள்ளது.
இந்த நடைமுறையால் காலதாமதம் அதிக அளவில் ஏற்பட்டு வந்துக்கொண்டிருக்கிறது. எனவே, இதை சரி செய்ய ஆன்லைனில் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் சிஸ்டம் கொண்டுவரபடவுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் (CCTNS) இணையதளத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களது தகவல்கள் சரிபார்க்கப்படும். இந்த சிஸ்டம் அடுத்த ஓராண்டுக்குள் அமல்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது
'ஆதார்' பதியாத கார்டுகள் ரேஷன் பொருட்கள், 'கட்'.
குடும்பத்தில் ஒருவரின், 'ஆதார்' விபரத்தையும் பதியாத ரேஷன் கார்டுகளுக்கு, அடுத்த மாதம் முதல், ரேஷன் பொருட்கள் வினியோகம் நிறுத்தப்படுகிறது. தமிழகத்தில், ஆதார் கார்டு விபரங்கள் அடிப்படையில், உணவுத்துறை, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கி வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, 56 ஆயிரத்து, 936 ரேஷன் கார்டுதாரர்கள், குடும்பத்தில் உள்ள ஒருவரின் ஆதார் விபரத்தையும், ரேஷன் கடைகளில் பதிவு செய்யவில்லை. அவர்கள், 24ம் தேதிக்குள், தங்களின் ஆதார் விபரத்தை பதிவு செய்து, ரேஷன் கார்டுகளை புதுப்பித்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு, பதியாத ரேஷன் கார்டுகளை, உணவு வழங்கல் துறை முடக்கி வைக்க உள்ளது. இதையடுத்து, அந்த கார்டுதாரர்களுக்கு, அடுத்த மாதம் முதல், ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும்.
அரசு பள்ளிகள் கல்வி தரம் உயர மாநிலங்களுக்கு உதவ புது திட்டம்.
மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்துவதை தடுக்கும் வகையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவது குறித்து, மாநிலங்களுடன் இணைந்து செயல்பட, மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்து வருகிறது.
இக்னோ' சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு.
'இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இக்னோ' மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
'இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையில், இளநிலை, முதுநிலை பட்டம், டிப்ளமா, முதுநிலை டிப்ளமா ஆகிய படிப்புகளில் சேர, ஆக., 25 வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, /onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, கூறப்பட்டுள்ளது.
பி.எஸ்சி., - பி.பார்ம்., படிக்க விண்ணப்பிக்க நாளை கடைசி.
பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற, இன்று கடைசி நாள். தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., போன்ற, ஒன்பது துணை நிலை மருத்துவ படிப்புகள் உள்ளன.
இந்த படிப்புகளுக்கு, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 538 இடங்களும், தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 7,458 இடங்களும் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் ; தமிழகம் முழுவதும் 50 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் 22-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
மருத்துவ படிப்பு இன்று தரவரிசை வெளியீடு.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தகுதி தேர்வு அடிப்படையில் இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், நீண்ட குழப்பத்துக்கு பின், 'நீட்' தேர்வு அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையை நடத்த, மாநில அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கான தரவரிசை பட்டியலை, மருத்துவ கல்வி இயக்ககம் இன்று வெளியிடுகிறது. ஓரிரு நாட்களில், மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு செப்.11-ல் தொடக்கம்.
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் (2017-18) எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடைகின்றன. இந்த மூன்று வகுப்புகளுக்குரிய தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் அனுப்பியுள்ளார்.
தேர்வு கால அட்டவணை விவரங்கள் பின்வருமாறு:–
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
செப்டம்பர் 11–ந் தேதி – தமிழ்முதல் தாள்.
12–ந் தேதி– தமிழ் 2–வது தாள்.
14–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்.
பிளஸ் 2 தேர்வில் மாற்றமில்லை.
'பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மற்றும் வினாத்தாள் முறையில், மாற்றம் இல்லை' என, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், தேர்வுக்கான மதிப்பெண்கள், பாட வாரியாக தலா, 200 என்பது, 100 ஆக மாற்றப்பட்டு உள்ளது. அது போல, பிளஸ் 2 தேர்வுக்கு மாற்றம் உண்டா என, மாணவ மாணவியரும் குழப்பத்தில் உள்ளனர். ஆனால், இந்த ஆண்டு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத் தேர்விலும், வினாத்தாள் மதிப்பெண் முறையிலும், மாற்றம் இல்லை என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017
அரசு பள்ளிகளில் பாடம் நடத்த தற்காலிக ஆசிரியருக்கு உத்தரவு.
ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரம் பேரும் பணிக்கு வந்து, பாடம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிளஸ் 1 பொதுத்தேர்வில் வருகைப் பதிவுக்கு 5 மதிப்பெண்: அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மாதிரி வினாத்தாள்.
பிளஸ் 1 பொதுத்தேர்வில் வருகைப்பதிவுக்கு பொதுப்பாடங்களுக்கு அதிகபட்சம் 3 மதிப்பெண்களும், தொழிற்கல்வி செய்முறைத் தேர்வு உடைய பாடங்களுக்கு அதிகபட்சம் 5 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 85சதவீதத்துக்கு மேல் வருகைப்பதிவு இருந்தால் முழு மதிப்பெண் அளிக்கப்படும்.11-ம் வகுப்புக்கு நடப்பு கல்வி ஆண்டு (2017-18) முதல் பொதுத்தேர்வு கொண்டுவரப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பொதுத்தேர்வு வினா அமைப்பு, மாதிரி வினாத்தாள், மதிப்பீட்டு முறை ஆகியவற்றை பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார். தமிழ், ஆங்கிலம் உட்பட 23 பாடங்களுக்கும் 13 தொழிற்கல்வி பாடங்களுக்கும் உரிய மாதிரி வினாத்தாள்கள் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (திங்கள் வழங்கப்படுகிறது. முன்னதாக கல்விச்செய்தி இணையதளத்தில் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
திங்கள், 21 ஆகஸ்ட், 2017
One Day Strike - ஆசிரியர்களின் வருகைப் பதிவு விவரங்கள் காலை 09.30 மணிக்குள் அனுப்பிட உத்தரவு!!
பள்ளிக்கல்வி - 22.08.2017 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் - ஆசிரியர்களின் வருகைப் பதிவு விவரங்கள் 22.08.2017 அன்று காலை 09.30 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பிட உத்தரவு!!
பள்ளிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு திடீர் தடை.
கல்வி வளர்ச்சி நாள், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் அப்துல் கலாம் பிறந்த நாள் போன்றவற்றின் போது, பள்ளிகளில், மாணவ - மாணவியர் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அரசு ஊழியர்கள் நாளை 'ஸ்டிரைக்' : அரசு அலுவலகம், பள்ளிகள் முடங்கும் அபாயம்.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடு கின்றனர். அதனால், அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு, 'ஒயிட்னர்' விற்றால் சிறை.
நரம்பு மண்டலத்தை செயல் இழக்கச் செய்யும், 'ஒயிட்னர்' போதைக்கு, மாணவர்கள் அடிமையாகி வருவதால், மாநிலம் முழுவதும் அதிரடி ரெய்டுக்கு, போலீசார் தயாராகி வருகின்றனர். தடையை மீறி விற்போரை, சிறையில் தள்ள திட்டமிட்டுள்ளனர்.
10 நாட்களில் மாணவர் சேர்க்கை மருத்துவ கவுன்சில் கெடுபிடி.
'நீட்' தேர்விலிருந்து, தமிழக அரசுக்கு இன்னும் விலக்கு கிடைக்காத நிலையில், வரும், 31க் குள் மாணவர் சேர்க்கையை முடிக்க, இந்திய மருத்துவ கவுன்சில், 'கெடு' விதித்து உள்ளது.
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.இந்தத் தேர்வின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களிலும், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது.
ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017
வங்கிகள் தனியார்மயமாதலைக் கண்டித்து ஆகஸ்ட் 22-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் !!
வங்கிகள் தனியார்மயமாதலைக் கண்டித்து ஆகஸ்ட் 22-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கடன்களை திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயம் செய்யக் கூடாது. வங்கிகளை இணைக்கக் கூடாது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
மாற்று திறனாளி பெண் ஊழியர்களுக்கு புதிய சலுகை.
ஏழாவது, மத்திய சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மாற்று திறனாளி பெண் ஊழியர்களுக்கான, குழந்தை பராமரிப்பு தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய பணியாளர் நலத்துறை, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு துறைகளில் பணியாற்றும், மாற்று திறனாளி பெண் ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை பராமரிக்க, மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த, 1,500 ரூபாய், தற்போது, 3,000 ரூபாயாக, உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை, இந்த நிதியுதவி, வழங்கப்படும்.
ஏன் முளைவிட்ட தானியங்களை கட்டாயம் சாப்பிட வேண்டும்?
முளைவிட்ட தானியங்கள் ஒரு முழுமையான உணவாக இருந்தாலும் இன்னும் மக்கள் அதை தினசரி உணவாகப் பயன்படுத்துவதில்லை. இப்போதுதான் ஜிம்மில் செல்பவர்கள், டயட் இருப்பவர்கள் என சிறிது உண்ணத் தொடங்குகிறோம்.
சனி, 19 ஆகஸ்ட், 2017
மாற்றுத்திறனாளிகள் தேசிய கல்வி உதவித்தொகை - ஆக.,31 விண்ணப்பிக்க இறுதிநாள்.
தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (NHFDC) மற்றும் சமூக அமைச்சகம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகின்றன.
உயர் கல்வி பயிலும் 500 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய நிதியின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள், ஆன்லைனில் ஆக., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு தொழிற் கல்வியில் பட்டப்படிப்பு மற்றும், அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள், விடுதியில் தங்கியிருந்தால் மாதம் 1,000 ரூபாயும், வீட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு மாதம் 700 ரூபாயும் வழங்கப்படும்.
கல்வி உதவித்தொகை பெற இறுதி தேதி அறிவிப்பு.
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, கடைசி தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, மாநில அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. பெரும்பாலான கல்வி உதவித்தொகை திட்டங்களை, மத்திய அரசு வழங்குகிறது.
பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள் : தமிழக அரசு உத்தரவு.
பிளஸ் 1 பொதுத் தேர்வில், தேர்ச்சி பெற, ஒவ்வொரு பாடத்திலும், குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
நடப்பாண்டு, பிளஸ் 1 வகுப்பிற்கு, மாநில அளவில், பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று அரசால் வெளியிடப்பட்டது.
நடப்பாண்டு, பிளஸ் 1 வகுப்பிற்கு, மாநில அளவில், பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று அரசால் வெளியிடப்பட்டது.
வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017
இலவச பாஸ் மாணவர்களுக்கு அவமதிப்பு : அரசு பஸ் கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை.
இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும், மாணவ - மாணவியரை ஏற்ற மறுத்து, அவமதிக்கும் கண்டக்டர், டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்படுவர்' என, அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.
சத்துணவு சமைக்க 'பிரஷர் குக்கர்'.
CPS : பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் தலைவர் முதல்வருடன் திடீர் சந்திப்பு.
பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் தலைவர் நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினார்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் ஒரு வல்லுனர் குழு அமைக்க ஆணையிட்டார்.
தமிழகம் முழுவதும் 40 மையங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் கணினி பயன்பாட்டை தெரிந்து கொள்ளவும் வகுப்பறையோடு தகவல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கவும் தேவைப்படும் கல்விசார் கணினி வளங்களை தயார் செய்து கொள்வதற்கு கணினி பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
டிப்ளமா ஆசிரியர் படிப்பு 31ம் தேதி வரை, 'அட்மிஷன்'.
தொடக்க கல்வித் துறையில், 'டிப்ளமா' ஆசிரியர் படிப்பில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. அதனால், வரும், 31ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், 450 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், டிப்ளமா ஆசிரியர் படிப்பான, டி.டி.எட்., நடத்தப்படுகிறது. இதில், மாணவர்களை சேர்க்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்பட்டுள்ளது.
வியாழன், 17 ஆகஸ்ட், 2017
ராமச்சந்திரா பல்கலையில் 2 புதிய படிப்புகள் துவக்கம்.
ராமச்சந்திரா மருத்துவ பல்கலையில், புதிதாக இரண்டு துணை மருத்துவ படிப்புகள் துவக்கப்பட்டு உள்ளன. நாட்டில் முதன் முதலாக, சென்னை, போரூர் ராமச்சந்திரா பல்கலையில், பி.எஸ்சி., மெடிக்கல் மைக்ரோபயாலஜி அண்ட் அப்லைடு மாலிக்யுலர் பயாலஜி மற்றும் பேச்சுலர் ஆப் ஆக்குபேஷனல் தெரபி என்ற, இரு துணை மருத்துவ படிப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
'நாட்டா' தேர்வு நாளை, 'ரிசல்ட்'.
பி.ஆர்க்., படிப்புக்கான, தமிழக அரசின், 'நாட்டா' தேர்வின் முடிவு, நாளை வெளியாகிறது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 49 ஆர்க்கிடெக்சர் கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்புக்கு, 3,043 இடங்கள் உள்ளன. அரசு ஒதுக்கீட்டில், கவுன்சிலிங் மூலம், 2,049 இடங்கள் நிரப்பப்படுகின்றன.
IIM நுழைவு தேர்வு பதிவு துவக்கம்.
நாடு முழுவதும், 20 இடங்களில் செயல்படும், ஐ.ஐ.எம்., என்ற, இந்திய மேலாண் உயர்கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., உள்ளிட்ட, முதுநிலை படிப்புகளில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வு,
நவ., 20ல் நடக்கிறது. இதற்கான'ஆன்லைன்' பதிவு, நடந்து வருகிறது; செப்., 20ல், பதிவு முடிகிறது. விபரங்களை, www.iimcat.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
நவ., 20ல் நடக்கிறது. இதற்கான'ஆன்லைன்' பதிவு, நடந்து வருகிறது; செப்., 20ல், பதிவு முடிகிறது. விபரங்களை, www.iimcat.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் நவ., 5ல் தேசிய திறனறி தேர்வு.
ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கும், தேசிய திறனறி தேர்வு, தமிழகத்தில், நவ., 5ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும், மாநில மற்றும் தேசிய அளவிலான திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவில் தேர்ச்சி பெறும்
மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், நவ., 5ல் தேர்வு நடக்க உள்ளது. மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, அந்தமான் - நிகோபார் தீவுகள் போன்றவற்றில் மட்டும், நவ., 4ல் தேர்வு நடக்கும் என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், நவ., 5ல் தேர்வு நடக்க உள்ளது. மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, அந்தமான் - நிகோபார் தீவுகள் போன்றவற்றில் மட்டும், நவ., 4ல் தேர்வு நடக்கும் என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
23ல் சட்ட படிப்பு கவுன்சிலிங்.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையின் கட்டுப்பாட்டில், ஏழு அரசு சட்டக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், ஐந்து ஆண்டு, பி.ஏ., - எல்.எல்.பி., ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு நடத்தப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஆக., 2 - 5 வரை நடந்தது.
தமிழக அரசின் ஓராண்டு நீட் அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்.
தமிழ்நாட்டில் இதுவரை பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில்தான் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில், ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வின் மூலம் மாணவர்களை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்தது. ‘நீட்’ தேர்வின் மூலம் தமிழகத்தில்
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில், ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வின் மூலம் மாணவர்களை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்தது. ‘நீட்’ தேர்வின் மூலம் தமிழகத்தில்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி : பயணப் படியும் உண்டு.
தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பயணப்படியுடன் சிறப்பு பயிற்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய திறனாய்வுத் தேர்வு 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடக்க உள்ளது.
தேசிய திறனாய்வுத் தேர்வு 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடக்க உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் துணை கலந்தாய்வு இன்று நடக்கிறது.
பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் உடனடியாக சிறப்பு துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்ஜினீயரிங் கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) நடத்தப்படுகிறது. அதற்காக அவர்கள் நேற்று பெயர்களை பதிவு செய்தனர்.
அருந்ததியினர் பிரிவில் நிரம்பாமல் உள்ள இடங்களில் ஆதிதிராவிடர்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். ஆதிதிராவிடர்களுக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
புதன், 16 ஆகஸ்ட், 2017
Android Mobile ல் வானவில் அவ்வையார், பாமினி போன்ற Fonts ஐ எப்படி எளிமையாக Install செய்வது?
Android Mobile ல் வானவில் அவ்வையார், பாமினி போன்ற Fonts ஐ எப்படி எளிமையாக Install செய்வது? - பாடசாலையின் Video Tutorial.
Google GBoard தரவிறக்கம் செய்து தமிழில் பேசுங்கள் தானாக தட்டச்சு செய்யும்.
கூகுளின் தமிழ் குரல் தேடல் ( voice search ) மற்றும் தமிழில் நாம் சொல்ல சொல்ல டைப் செய்வதை ( voice typing) நம் திறன் பேசிக்கு சில அமைப்பு முறை மாற்றம் ( settings change) மற்றும் ஓர் மென் பொருள் நிறுவல் ( application install) மூலம் எளிமையாக செய்யலாம். அந்த மென் பொருளின் பெயர் கூகுள் " ஜீபோர்ட் " ( Gboard) . Google voice search, YouTube voice search, app store voice search ஆகியவற்றில் தமிழில் குரல் தேடலில் ஈடுபட Gboard தேவையில்லை. இதற்கு அமைப்பு முறையில் சில மாற்றங்களை செய்தால் மட்டும் போதுமானது.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 'ஆண்ட்ராய்டு ஆப்' - தேர்தல் ஆணையம் அசத்தல்.
வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்களது பெயரைச் சேர்க்கவும் முகவரி உள்ளிட்ட விவரங்களைத் திருத்தம் செய்துகொள்வதற்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஈரோ-நெட் (ERO-NET) என்ற இணையதளம் மற்றும் 'ஆண்ட்ராய்டு ஆப்'-ஐ அறிமுகம்செய்திருக்கிறது. புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மாநிலத் தேர்தல் அலுவலகத்தில், இந்த 'ஆப்'-ஐ மாநிலத் தேர்தல் ஆணையர் கந்தவேலு அறிமுகப்படுத்தினார்.
இன்ஜி., மாணவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 பாடம்.
இன்ஜி., கல்லுாரிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2வில் உள்ள, கணிதம், இயற்பியல் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செப்., 1ல் அனைத்து தனியார் இன்ஜி., கல்லுாரிகளும் வகுப்புகளை துவங்க உள்ளன. இரண்டு வாரங்களுக்கு, மாணவர்களுக்கு இன்ஜினியரிங் முன் தயாரிப்பு பயிற்சி வழங்க, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது.
செப்., 1ல் அனைத்து தனியார் இன்ஜி., கல்லுாரிகளும் வகுப்புகளை துவங்க உள்ளன. இரண்டு வாரங்களுக்கு, மாணவர்களுக்கு இன்ஜினியரிங் முன் தயாரிப்பு பயிற்சி வழங்க, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது.
செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)