ஆய்வக உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக அரசாணை ஓரிரு நாட்களில்
வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்...
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பள்ளி கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் தலைமை தாங்கினார்.அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள் ரெ.இளங்கோவன், க.அறிவொளி, ச.கண்ணப்பன், கார்மேகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொடக்கத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வரவேற்றார்.அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:– ஆய்வக உதவியாளர்கள் நியமிப்பதற்கான தேர்வு முடிவு 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படும்.
போதிய ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டுக்குள் நியமிக்கப்படுவார்கள். நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக