திங்கள், 20 மார்ச், 2017

BSNL புதிய சலுகை

பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 'பிரீ பெய்டு' வாடிக்கையாளர்களுக்கு, புதிய சலுகையை அறிவித்துள்ளது.'ஜியோ' நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. அதை சமாளிக்கும் வகையில், பி.எஸ்.என்.எல்., நிறுவனமும், பிரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து உள்ளது.


அதாவது, 339 ரூபாய்க்கு, 'ரீசார்ஜ்' செய்தால், 28 நாட்களுக்கு, பி.எஸ்.என்.எல்., எண்ணிற்கு, இலவசமாக பேசிக் கொள்ளலாம். மேலும், தினசரி, 2, 'ஜிபி' அளவிற்கு, 'இன்டர்நெட் டேட்டா' இலவசம். மார்ச், 16ல் துவங்கி, மூன்று மாதங்களுக்கு, இந்த சலுகை அமலில் இருக்கும் என, பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக