வியாழன், 10 ஆகஸ்ட், 2017

விடுமுறை எடுக்காமல் வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்.

எந்த வேலையாக இருந்தாலும் சரி அதில் நேரம் தவறாமை மிக அவசியம். ஒழுங்கு முறையின் கீழ் வரும் இந்தப் பழக்கம் உயர்ப் பணிகளிலும் நம்மை அமர வைக்கும். அது பள்ளிகளிலிருந்தே தொடங்கினால் வாழ் முழுக்க அந்த மாணவர்கள் சிறந்து விளங்க முடியும். 

 பள்ளிக் கல்லூரிப் படிப்புகளை முடித்தப் பிறகு அவர்கள் செல்லும் பணிகளிலும் அவர்கள் சரியான நேரத்திற்காக பாராட்டுக்களைப் பெறுவதோடு, பதவியுயர்வும் பெற முடியும். இந்த காலம் தவறாமை மற்றும் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கும் வரும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் ஒரு முக்கியமான செய்தியை பள்ளிக் கல்வி இயக்குநரகம் ஒரு பாராட்டுச் சான்றிதழ் வழங்கவுள்ளது.

அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் லிஸ்டினை பள்ளிக் கல்வி இயக்குநரகம் கேட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் பதினொன்றாம் தேதிக்குள் படிவத்தை பூர்த்தி செய்து இணை இயக்குநர் (தொழிற்கல்வி) முகவரிக்கு மெயில் அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக