வியாழன், 10 ஆகஸ்ட், 2017

இன்று (10.08.2017) நாடு முழுவதும் குடற்புழு நீக்கம் சிறப்பு முகாம்

இன்று(ஆக.,11) தேசிய குடற்புழு நீக்க நாளாக அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 

இந்தியாவில், 1 முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகளில், 24.1 கோடி பேருக்கு குடற்புழு தொற்று அபாயம் இருப்பதாக, உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரிந்துள்ளது. இதனால், ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. 

மேலும், பசியின்மை, வாந்தி, வயிற்று வலி, வயிற்று போக்கு, வைட்டமின், 'ஏ' சத்து குறைவு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, இன்று, நாடு முழுவதும் அங்கன்வாடி மையம், பள்ளிகளில் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக