சனி, 5 ஆகஸ்ட், 2017

பள்ளிகளில், 'துாய்மை இந்தியா' திட்டத்தில், நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்- மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்.

'அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், துாய்மை திட்ட நிகழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

மத்திய அரசு சார்பில், அனைத்து வகை வணிக நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பொது இடங்கள் போன்றவற்றில், 'துாய்மை இந்தியா' எனப்படும், 'ஸ்வச் பாரத்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு நிறுவனங்களிலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. 


சுற்றறிக்கை : அதன்படி, செப்., 1 - 15 வரை, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'துாய்மை இந்தியா' திட்டத்தில், நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், 'மாநில பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், செப்., 1ல், துாய்மை இந்தியா உறுதிமொழி மேற்கொள்ள வேண்டும். 'பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கழிப்பறை வசதி களை, அதிகாரிகளும், ஆசிரியர்களும் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தயாரிக்க வேண்டும். 
வழிகாட்டுதல்கள் 'மாணவ, மாணவியருக்கு, 'துாய்மை இந்தியா' குறித்து, போட்டி கள் நடத்தி பரிசு வழங்க வேண்டும். பள்ளி மேலாண் குழு, பெற்றோர் - ஆசிரியர் கழகம் ஆகியவற்றை கூட்டி, துாய்மையை பேணுவதற்கான திட்டம் குறித்து, ஆலோசிக்க வேண்டும். 


'பள்ளி வளாகங்களில் குவிக்கப்பட்டுள்ள, தேவையற்ற பொருட்கள், குப்பையை அகற்ற வேண்டும்' என, பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக