சனி, 5 ஆகஸ்ட், 2017

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.

2017–18–ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை மாதம் 31–ந் தேதி கடைசி நாளாக இருந்தது. இந்த ஆண்டு கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்டு 5–ந் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அதன்படி இன்று (சனிக்கிழமை) வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள்.

சென்னை ஆயக்கர் பவனில் உள்ள வருமான வரி சேவை மையம் (ஆயக்கர் சேவா கேந்திரா) மற்றும் தாம்பரத்தில் உள்ள வருமான வரி சேவை மையம் ஆகிய அலுவலகங்களில் இன்று கவுண்ட்டர்கள் திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக