புதன், 2 ஆகஸ்ட், 2017

காஸ் மானியம் ரத்து இல்லை: மத்திய அரசு விளக்கம்.

காஸ் மானியம் ரத்து செய்யப்பட
மாட்டாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

அமளி:

வீடுகளில் பயன்படுத்தப்படும், 14.2 கிலோ எடையுள்ள, சமையல், 'காஸ்' சிலிண்டருக்கு மானியம் வழங்குவதை நிறுத்தும் வகையில், அதன் விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை, படிப்படியாக குறைத்து, 2018 மார்ச்சுக்குள், மானியத்தை முழுமையாக ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனையடுத்து ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

ஆதாரமற்றது:

இது குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜ்யசபாவில் விளக்கம் அளித்து பேசுகையில், காஸ் மானியம் ரத்து செய்யப்படாது. இந்த மானியம் முறைபடுத்தப்படும். எம்.பி.,க்கள் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அமளியில் ஈடுபடுவது தேவையற்றது. யாருக்கு சிலிண்டர் மானியம் தேவை. யாருக்கு தேவையில்லை என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக