புதன், 22 மார்ச், 2017

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு ஏப்ரல் 1 முதல் வினியோகம்.

தமிழகத்தில், ஏப்., 1 முதல்,தமிழகத்தில், ஏப்., 1 முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ஐந்து பிரிவுகளில் கார்டு அச்சிடும் பணி, முழு வீச்சில் நடக்கிறது. அதை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மூலம் வழங்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது. 
இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும், அடுத்த மாதம், ஸ்மார்ட் ரேஷன் கார்டு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர் ஆகியோர் முன்னிலையில், பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.இதற்காக, மேற்கண்ட நபர்களிடம், முன்கூட்டியே தேதி பெற்று, அந்த விபரத்தை, இம்மாதம், 24ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு, உயரதிகாரிகள் தெரிவித்தனர்.எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொண்டால், 'பிசியாக இருக்கிறார்' என, அவரின் உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அவர்களை அழைக்காமல், ரேஷன் கார்டுகளை வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ஐந்து பிரிவுகளில் கார்டு அச்சிடும் பணி, முழு வீச்சில் நடக்கிறது. அதை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மூலம் வழங்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது. சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, தொகுதி மக்கள் முற்றுகையிட்டு வருவதால், அவர்கள், சென்னையில் முகாமிட்டு உள்ளனர். இதனால், ஸ்மார்ட் கார்டு வினியோகத்துக்கு, அவர்கள் தேதி கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக