பணியிடங்களில் பணிபுரியும் பெண்கள் ஊழியர்களால் பாலியல் தொல்லைக்கு
ஆளானால், அது குறித்து விசாரிக்க அந்தந்த நிறுவனங்களில் சிறப்பு கமிட்டி
அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த விசாரணை காலத்தில் குற்றம் இழைத்த நபர்கள்
தரப்பில் இருந்து அந்த பெண்களுக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து வருவதாக புகார்
வந்தது. இதை தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும்
பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானால், அவர்களுக்கு விசாரணை காலத்தில் 90
நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க மத்திய பணியாளர் நலத்துறை
அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அந்த குற்றத்தை விசாரிக்கும் கமிட்டியினுடைய பரிந்துரையின்படி, விடுப்பு வழங்கப்படும் எனவும், பாலியல் புகார் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்கனவே இருக்கும் விடுப்பு காலம் இதில் இருந்து கழிக்கப்படாது என்றும் அறிவித்து உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக