சனி, 18 மார்ச், 2017

வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள்தொகு.

அ, இ, உ சுட்டெழுத்துக்களின் பின்தொகு

அ + காலம் = அக்காலம்இ + சமயம் = இச்சமயம்உ + பக்கம் = உப்பக்கம் ('உ' எனும் சுட்டெழுத்து வழக்கில் இல்லை)

எ என்னும் வினா எழுத்தின் பின்தொகு

எ + பொருள் = எப்பொருள்

அந்த, இந்த, எந்த என்னும் அண்மை, சேய்மைச் சுட்டுகள் மற்றும் வினாச் சுட்டுகளின் பின்தொகு


அந்த + காலம் = அந்தக் காலம்இந்த + சிறுவன் = இந்தச் சிறுவன்எந்த + பையன் = எந்தப் பையன்

அப்படி, எப்படி, இப்படி என்னும் சொற்களின் பின்தொகு

அப்படி + கேள் = அப்படிக் கேள்இப்படி + சொல் = இப்படிச் சொல்எப்படி + பார்ப்பது = எப்படிப் பார்ப்பது

இரண்டாம் வேற்றுமை உருபுக்குப்பின் (ஐ)தொகு

அவனைக் கண்டேன்செய்யுளைச் சொன்னேன்அவளைத் தேடினேன்குறளைப் படித்தேன்

நான்காம் வேற்றுமை உருபுக்குப்பின் (கு)தொகு

அவனுக்குக் கொடுத்தேன்அவளுக்குச் சொன்னேன்

என, ஆக என்ற சொற்களுக்குப்பின்தொகு

எனக் கூறினான்அவனாகச் சொன்னான்

ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறிணைப் பெயர்களின் பின் வல்லெழுத்துகள் மிகும்.

புலி (அது)  தலை  புலித்தலை குருவி  கூடு  குருவிக் கூடு


ஏழாம் வேற்றுமைத் தொகையில் மிகுவதைக் காணலாம். மனை (கண்)  பிறந்தார்  மனைக்கண் பிறந்தார் குடி  பிறந்தார்  குடிப்பிறந்தார்


இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் மிகும். தயிர் (தயிரையுடைய)  குடம்  தயிர்க்குடம் காய்கறி  கடை  காய்கறிக்கடை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் மிகும்.


பட்டு  (பட்டினால் ஆகிய) சேலை  பட்டுச் சேலை மோர்  குழம்பு  மோர்க் குழம்பு


நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் மிகும். குழந்தை (குழந்தைக்கு)  பால்  குழந்தைப் பால் கோழி  தீனி  கோழித் தீனி


ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் மிகும். வாய் (வாயின்)  பாட்டு  வாய்ப் பாட்டு விழி  புனல்  விழிப் புனல்


ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வரும் வல்லெழுத்துகள் மிகும். பூ  பறித்தான்  பூப் பறித்தான் தீ  பிடித்தது  தீப் பிடித்தது கை  குழந்தை  கைக் குழந்தை


ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வரும் வல்லெழுத்துகள் மிகும். அறியா (த)  பிள்ளை  அறியாப் பிள்ளை காணா (த)  காட்சி  காணாக் காட்சி ஓடா (த)  குதிரை  ஓடாக் குதிரை அகரää இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலி மிகும். வர  சொன்னான்  வரச் சொன்னான் மெல்ல  பேசினார்  மெல்லப் பேசினார் ஓடி  போனான்  ஓடிப் போனான்


ஆய்ää போய்ää ஆகää என என்னும் வினையெச்சங்களின் பின்னும் வலி மிகும். பார்ப்பதாய்  சொன்னான்  பார்ப்பதாய்ச் சொன்னான் போய்  பார்த்தான்  போய்ப் பார்த்தான் இருப்பதாக  சொன்னான்  இருப்பதாகச் சொன்னான் என  கூறினான்  எனக் கூறினான்


வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வரும் வல்லெழுத்துகள் மிகும். எட்டு  தொகை  எட்டுத் தொகை பத்து  பாட்டு  பத்துப் பாட்டு கற்று  கொடுத்தான்  கற்றுக் கொடுத்தான் விட்டு  சென்றான்  விட்டுச் சென்றான் வைத்து  போனான்  வைத்துப்போனான் பாக்கு  தின்றான்  பாக்குத்தின்றான் திருää நடுää முழுää விழுää பொதுää அணு போன்றுள்ள முற்றியலுகரச் சொற்களை அடுத்து வரும் வல்லெழுத்துகள் மிகும். திரு  தொண்டு  திருத் தொண்டு நடு  தெரு  நடுத் தெரு முழு  பேச்சு  முழுப் பேச்சு விழு  பொருள்  விழுப் பொருள் பொது  பணி  பொதுப் பணி அணு  குண்டு  அணுக் குண்டு


இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வரும் வல்லெழுத்துகள் மிகும்.

தை  திங்கள்  தைத் திங்கள் சாரை  பாம்பு  சாரைப் பாம்பு


உவமைத் தொகையை அடுத்து வலி மிகும். தாமரை  கண்  தாமரைக்கண் மலை  தோள்  மலைத்தோள்


டää ற என்னும் எழுத்துகள் இரட்டித்து நெடில் தொடர்க் குற்றியலுகரத்துக்குப் பின்னும் வல்லெழுத்து மிகும். மாடு ää மாட்டு  சாணம்  மாட்ச் சாணம் வீடு ää வீட்டு  சோறு  வீட்டுச் சோறு ஆறு ää ஆற்று  தண்ணீர்  ஆற்றுத் தண்ணீர் கிணறுää கிணற்று  தவளை  கிணற்றுத் தவளை


யää ரää ழ ஆகிய எழுத்துகள் ஈற்றாகச் சொற்களுக்குப் பின்வரும் கää சää தää ப மிகும். பொய்  காதல்  பொய்க் காதல் ஊர்  பேச்சு  ஊர்ப் பேச்சு கீழ்  திசை  கீழ்த் திசை


மகர ஈற்றுப் பெயர்களிலுள்ள மகர எழுத்தானது சேரும் இடத்தும் கää சää தää ப மிகும். மர (ம்)  கிளை  மரக் கிளை வட்ட (ம்)  கிணறு  வட்டக் கிணறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக